இப்பதான் ஆரம்பிச்சோம்!. அதுக்குள்ள பஞ்சாயத்தா?!.. எஸ்.கே. 22-வுக்கு வந்த சிக்கல்!..

Published on: February 16, 2024
sk22
---Advertisement---

தொலைக்காட்சி தொகுப்பாளராக வேலை செய்த சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் மிமிக்ரியிலும், நடனம் ஆடுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். டிவியில் வேலை செய்வதற்கு முன் பல இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் நடிப்பின் மீது ஆசை வர சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

அப்படி கிடைத்த வாய்ப்புதான் மெரினா. அதன்பின் பல படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே திரையுலகில் முக்கிய நடிகராக மாறினார். ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: என் பஞ்சே என்னை பஞ்சராக்குச்சு! திரை விமர்சகர் சுரேஷை மிரட்டிய கமல் – என்ன படத்துக்காக தெரியுமா?

அதுவும் டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடியை வசூல் செய்தது. அதேபோல், மாவீரன் படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

இதற்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து உடம்பையும் மாற்றி இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதோடு, இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: முத்துவை மாட்டி விட தயாரான சத்யா… இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள சண்டைய?

இது சிவகார்த்திகேயனின் 22வது திரைப்படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது. தர்பார் படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் இது. படப்பிடிப்பு துவங்கி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

இந்த படத்தில் வெளிமாநில அவுட்டோர் யூனிட் ஆட்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் எந்த திரைப்படத்திற்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என அவுட்டோர் யூனிட் சங்கம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் எஸ்.கே. 22 படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.