Connect with us

latest news

முத்துவை மாட்டி விட தயாரான சத்யா… இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள சண்டைய?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் சத்யா என் விஷயத்தில் நீங்க தலையிட கூடாது. உங்களுக்கு உரிமை இல்லை என முத்துவை அவமரியாதை செய்ய கடுப்பாகி கிளம்பிவிடுகிறார். நேராக ஷெட்டுக்கு வரும் முத்து, செல்வத்திடம் அவன் எப்படி பேசுறான்டா? திருந்த மாட்டான் என புலம்புகிறார்.

கையில் வைத்திருந்த சரக்கை ராவாக குடித்துவிட்டு என்னை குடிக்காரன் என்கிறான். என் பொண்டாட்டிக்கு நகை வாங்கிக்கொடுக்க முடியாதாம். நான் வெறும் டிரைவராம். இது தெரிஞ்சா அவன் நாக்கை என் பொண்டாட்டி அறுத்து விட்டு இருப்பா. பாவம்டா மீனா என உளறிக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயின் முதல் படத்தை பாராட்டி நடிகர் திலகம் கொடுத்த அன்பளிப்பு!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

ஹாஸ்பிட்டலில் சத்யாவின் கை உடைந்ததுக்கு ஸ்கேன் வந்து விடுகிறது. அதில் அவருக்கு உடனே ஒரு ஆபிரேஷன் செய்யணும். அதுக்கு 30 ஆயிரம் செலவாகும் என்கின்றனர். மீனா மற்றும் அவர் அம்மாவிடம் சேர்த்தே 18 ஆயிரம் தான் இருக்கிறது. அப்போ வரும் பெண்கள் சிலர் டாக்டரிடம் பேசு நல்லவர் எனக் கூறுகின்றனர்.

மருத்துவரை பார்க்கும் மீனா தங்கள் பிரச்னையை கூற அவரும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிக்கலாம் என்கிறார். பின்னர் தம்பி எப்படி என விசாரிக்க நல்ல பையன் தான் என்கிறார் மீனா. ஆனா அவன் பைக்கில் விழுந்து கையை உடைச்சிக்கல. அவன் சண்டைக்கு போய் யாரோ கையை முறிச்சிருக்காங்க என்கிறார்.

இதையும் படிங்க: விஜய் மீது இம்புட்டு பாசமா!.. தென்காசி கோயிலில் சமுத்திரகனி சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் செம ஹேப்பி!

பின்னர் சத்யாவுக்கு ஆபிரேஷன் செய்து அழைத்து வந்துவிடுகின்றனர். மீனா குழப்பமாக எப்படி விழுந்த எனக் கேட்க பைக்கில் இருந்து என சத்யா இழுக்கிறான். அந்த பையனை பைக்கை எடுத்துக்கிட்டு வரச் சொல்லு என மீனா கோபப்பட சரிக்கா நான் பைக்கில் இருந்து விழவில்லை என்ற உண்மையை உடைப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

நாளை காட்சியில் முத்துவிடம் என் தம்பி கையை ஏன் உடைச்சீங்க? படிக்கிற பையன் கையை இப்படி செஞ்சி வச்சிருக்கீங்க. ஊரில் இருக்கவங்க கையை தான் உடைச்சீங்க. இப்போ என் தம்பிட்டையுமே என கேட்டுக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு அடுத்த சிக்கல் ஆரம்பிச்சிடுச்சு போல… சைக்கோ நம்பர் ஒன் எண்ட்ரியா?

google news
Continue Reading

More in latest news

To Top