தமிழ் சினிமா கனவுக்கன்னிகளில் ஒருவரான தமன்னாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் அந்த அவந்திகா கதாபாத்திரத்திற்கு இன்று ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதுகுறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான படம் பாகுபலி. இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட்டனர். திரைப்பட உலகினையே திரும்பி பார்க்க வைத்த பாகுபலி. முதல் பாகத்தில் கடைசி கிளைமேக்ஸில் பாகுபலியை கட்டப்பா கொன்று விடுவார். இதற்கு காரணம் தேடி பலரும் அழைந்த கதையெல்லாம் சொல்லி மாளாது. பல போராட்டத்திற்கு பின்னர் 2 வருடம் கழித்து வெளியாகி அதற்கு விடை கொடுத்தது பாகுபலி.
இப்படத்தில் பிரபாஸ் பாகுபலியாக நடித்திருந்தார். அவருக்கு அனுஷ்கா ஷர்மா, தமன்னா நாயகிகளாக நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவிற்கு, பிரபாஸிற்கு சமமான கதாபாத்திரத்தினை ராஜமௌலி கொடுத்திருப்பார். வாள் சண்டை போடுவதில் இருந்து அவரின் வசனங்களை பல பாராட்டினை பெற்றது. ஆனால், தமன்னாவிற்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தமன்னாவினை ராஜமௌலி கலாய்த்து பேசி இருக்கிறார். முதலில் தமன்னா ரோலுக்கு ஒரு குரங்கினை தான் தேர்வு செய்தோம். ஆனால், அது மிருகவதை தடுப்பு சட்டத்தில் எதுவும் பிரச்சனை வருமோ என நினைத்தோம். தொடர்ந்து, கிராபிக்ஸ் பண்ணலாமா என நினைக்கும் போது அதுவும் படத்தின் அழகினை கெடுக்கும். இதை தொடர்ந்தே, அந்த கதாபாத்திரத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்தோம். கமர்சியலுக்காக காதல் காட்சிகளையும் சேர்த்தோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வனை பாகுபலியோட கம்பேர் பண்ணாதீங்க!… ஏன் தெரியுமா?…..
நடிகர் ரஜினி…
சுதா கொங்கரா…
இயக்குனர் விக்ரமனிடம்…
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…