ட்ரோலா பண்றீங்க… இனியாவுக்காக பாக்கியலட்சுமி டீம் பின்னும் அடுத்த சதி செயல்… ஆத்தாடி!

by ராம் சுதன் |

Bakkiyalakshmi: விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீரியல் இறுதிகட்டத்தினை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் மீண்டும் ஒரு டிராக்கை உருவாக்கி இருக்கிறார்.

பாக்கியா என்னும் குடும்ப தலைவியின் போராட்டத்தை சொல்வதாக தான் இந்த சீரியல் முதலில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தொய்வாகவே இக்கதை நகர்ந்து வந்தாலும், கோபி கேரக்டரில் நடித்த சதீஷ் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தார்.

அதிலிருந்து பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்கியாவை ஏமாற்றிய கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அப்போதும் தன்னுடைய முதல் குடும்பத்தை அவர் விட முடியாமல் இங்கும் அங்குமாக அலைந்து அவர் அடைந்த பிரச்சனைகள் ஏராளம்.

ஒரு கட்டத்தில் வில்லத்தனமாக சிந்திக்கும்படி பாக்கியாவின் ஆர்டரில் கறியை கலந்து தன்னுடைய சித்து வேலையை செய்தார். அதிலும் பாக்கியா தப்பித்தார். இதை தொடர்ந்து கோபிக்கு நெஞ்சு வலி வர அவரை பாக்கியா காப்பாற்றினார். அதிலிருந்து அவருக்கும் மனம் மாறியது.

இரண்டாம் மனைவியான ராதிகா கோபியை பிரிந்து சென்றுவிட்டார். தற்போது கோபி தன்னுடைய முதல் குடும்பத்துடன் இருந்து வருகிறார். அந்த கதைக்களத்தில் எபிசோட் நகர்ந்து வருகிறது. சமீபத்தில் இவரின் மகள் இனியாவின் நடனம் எல்லா சோஷியல் மீடியாவிலும் ட்ரோல் செய்யப்பட்டது.

அதில் அவர் அப்செட்டான விஷயம் கூட கசிந்தது. இந்நிலையில் அவரை சமாதானம் செய்ய தற்போது சீரியல் டைரக்டர் அவருக்கென தனி ட்ராக்கை உருவாக்கி இருக்கிறாராம். கல்லூரியில் படிக்கும் இனியா தற்போது காதலில் சிக்க இருக்கிறார். ஏற்கனவே பள்ளி காதலன், டியூஷன் லவ், பழனிச்சாமியின் அக்கா மகன் லவ் என பல டிராக் இவருக்கு வைக்கப்பட்டது.

ஆனால் அது எல்லாமே பாதியிலேயே முடிக்கப்பட்டது. இந்நிலையில் கனா காணும் காலங்கள் புகழ் அஜித்தை புது காதலராக களமிறக்கி இருக்கின்றனர். ஒரு வேளை இனியா கல்யாணத்தோட சீரியலுக்கு எண்ட் கார்ட் போடுவாங்களோ என ரசிகர்கள் பேச தொடங்கி உள்ளனர்.

Next Story