சமையல் ஷோ பிரச்னையால் டிவிக்கே டாட்டா காட்டிய இதிகாச தொகுப்பாளினி…. கோவம் இருக்கும்ல!

by ராம் சுதன் |

Gossip: நடிகர் பெயர் கொண்ட டிவி சேனலில் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய பிரச்சனை யாராலும் மறக்க முடியாது. பல சீசன்களை கடந்த காமெடி சமையல் நிகழ்ச்சி அதுவரை பலரிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு அந்த சீசன் தொடங்கப்பட்டதிலிருந்து சர்ச்சைக்கு மேல் சர்ச்சைகளை அடி எடுத்து வைத்தது. நன்றாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் தங்களுடைய பிரபலங்களை தூக்கிப் பிடிக்க சிலவற்றை செய்து டிவி நிர்வாகம் ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கும் சமயத்தில் அதிலிருந்து இதிகாச தொகுப்பாளினி தான் விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர் இதற்கு முன்னரே காமெடி செய்து வந்தபோதும் சாதாரணமாக சொல்லிவிட்டு விலகி இருந்தால் இது பிரச்சினை ஆகி இருக்காது.

அவர் தான் வெளியேறுவதற்கு போட்டியிடிருந்த இன்னொரு தொகுப்பாளினி தான் காரணம் என அப்பட்டமாக விஷயத்தை உடைத்தார். இதனால் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் அவர் குறிப்பிட்ட தொகுப்பாளினியோ எந்த சத்தமும் போடாமல் நாட்டை விட்டு சில நாள் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் அவர் தன்னுடைய சகாக்களை விட்டு விஷயத்தை தனக்கு சாதகமாக போட சொல்ல அதுவும் பின்னர் சர்ச்சையானது.

எப்போதும் போல இந்த விஷயமும் சில நாள் வைரலாக இருந்துவிட்டு மறைந்து விட்டது. குறிப்பிட்ட தொகுப்பானினியும் மீண்டும் டிவியில் தன்னுடைய இடத்தை உயர்த்திக்கொண்டு தான் சென்று கொண்டிருக்கிறார்.

இதில் கடுப்பான இதிகாசக தொகுப்பாளினி மொத்தமாக டிவியை விட்டே வெளியேற இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. அந்த வகையில் அவர் அடுத்து இன்னொரு பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக போட்டி தொலைக்காட்சிக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

Next Story