10 படிக்கும் போது திருமணம்! உடனே விவாகரத்து..போராட்டத்தை கடந்து வந்த கம்பம் மீனா
கம்பம் மீனா: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த சீரியலில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் கம்பம் மீனா. தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வருகிறார். டிவி சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கம்பம் மீனா. இவருடைய எதார்த்தனமான நடிப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு திருமணமா?: எதார்த்தமான நடிப்பாலும் அவருடைய வசனத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு ஈர்க்கப்பட்டவர். சமீபத்தில் கூட இவருக்கு விபத்து ஏற்பட்டு அவருடைய கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அந்த செய்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்து அதன் பிறகு விவாகரத்தும் ஆகியிருக்கிறது.
விவாகரத்துக்கான காரணம்: அதைப்பற்றி ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார் கம்பம் மீனா. அதாவது பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்து விட்டது. 19 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் .அதில் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க இன்னொருவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில்தான் என் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றோம் .
இரண்டு மகன்கள்: என் கணவர் என்னுடைய சொந்த தாய் மாமன் பையன் தான். இருந்தாலும் எங்களுக்குள் பிடிக்கவில்லை. அதனால் இருவரும் பிரிந்து விட்டோம். அதிலிருந்து இன்றுவரை என் மகன்களை ஒரு சிங்கிள் அம்மாவாக வளர்த்து வருகிறேன். இருவருக்குமே எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. இருவரையும் நன்றாக படிக்க வைத்திருக்கிறேன். அதில் ஒருவன் காதல் திருமணம் செய்து கொண்டான்.
இன்னொருவனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் உறவினர்கள் மத்தியில் ஒரு நல்ல நிலைமையில் வர வேண்டும் என்பதனால் தான் இதுவரை நான் போராடிக் கொண்டிருக்கிறேன். முதன் முதலில் பாரதிராஜா இயக்கிய தெக்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நான் நடித்தேன்.
அதன் பிறகு தான் சென்னை எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் இருந்த எனக்கு தெற்கத்தி பொண்ணு சீரியலுக்கு பிறகு தான் சென்னையில் வாய்ப்புகள் தேட வந்தேன். இப்படித்தான் சினிமாவிலும் சீரியலிலும் அடுத்தடுத்து நடிக்க வந்தேன் என கம்பம் மீனா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.