குக் வித் கோமாளி பிரச்னையில் நடந்தது? முதல்முறையா சரியா பேசும் விஜய் பிரபலம்!..
Cookwithcomali: பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பஞ்சாயத்து குறித்து விஜய் டிவி பிரபலம் முதல்முறையாக இருதரப்பிற்கும் சாதகமாக பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களில் பலரைக் கவர்ந்த நிகழ்ச்சியாக வலம் வந்தது குக் வித் கோமாளி. ஆனால் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து சர்ச்சைகளை மட்டுமே சந்தித்து வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய தூண்களாக அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனம், நடுவர் வெங்கடேஷ் பட் என தொடர்ச்சியாக வெளியேறினர்.
இதனால் ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள புது நிறுவனமான பாக்ஸ் ஆபீஸ் தொடர்ச்சியாக பல புதிய யுத்திகளை கையாண்டது. இருந்தும் ரசிகர்களிடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இதுவரை பாசிட்டிவ் மட்டுமே கண்ட குக் வித் கோமாளி நெகட்டிவ் விமர்சனங்களை குறித்தது.
இந்நிலையில் மணிமேகலை தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் குக்காக வந்த பிரபல ஆங்கர் என்னை வேலை செய்ய விடாமல் அடக்குமுறை செய்வதாக மிகப்பெரிய குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்க பிரச்சனை பெரிதாக வெடித்தது.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவருமே மணிமேகலையின் பக்கம் நின்றனர். தொடர்ச்சியாக விஜே பிரியங்கா விமர்சிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரின் நண்பர்கள் நிகழ்ச்சியில் நடந்தது என்ன என தொடர்ச்சியாக வீடியோக்கள் மூலம் பேச தொடங்கினர்.
அது மட்டுமில்லாமல் அவர்கள் மணிமேகலையை விமர்சிக்கவும் செய்தனர். பிரியங்கா பக்கம் மட்டுமே நியாயம் இருப்பது போல அவர்கள் பேசியதும் மேலும் பிரச்சனைக்கு தூபம் போடுவதாக அமைந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட நாளில் நடந்த சூட்டிங்கில் இருந்த விஜய் டிவி பிரபலமான சரண்யா இது குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவர் கூறும் போது, நிகழ்ச்சியில் நாங்கள் போன எபிசோடில் தான் இந்த பிரச்சினை நடந்தது. நான் அங்கு இருந்து பார்த்திருந்தால் கூட என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும்.
எதுக்காக ஒருத்தர் கத்தினார். எதற்காக அவர் இதை எதிர்பார்த்தார் என்பது இருவருக்கும் சம்பந்தப்பட்ட விஷயம். அத்தனை வாரமாக கூட இருக்கும் நபர்கள் கூட இதை கணிக்க முடியாது. என்ன வார்த்தை ஒருவர் சொல்வது இன்னொருவரை வலித்திருக்கும். எதனால் இவர் கோபம் ஆகினார் என்பது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
இவர்கள் இருவரும் தனிப்பட்ட அமர்ந்து பேசிக்கொள்ளவோ அல்லது சண்டையிட்டு கொள்ளவோ வேண்டிய விஷயம் இது. இதை விடுத்து அருகில் இருந்தவர்களால் என்ன நடந்து என்பதை அவ்வளவு துல்லியமாக சொல்லிவிட முடியாது. இவங்க என்ன சொல்லி அவங்க அதுக்கு இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருப்பாங்க என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.