விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழின் புது திட்டம்! எங்களுக்கும் ஒரு விஜய் இருக்காருங்க..

ZeeTamil: பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் முதலிடத்தை பிடிக்க ஏகப்பட்ட புதிய முயற்சிகளை கையில் எடுத்து வரும் நிலையில் தற்போது இன்னொரு புதிய ஐடியாவை கையில் எடுத்துள்ளது.

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் மற்றும் சன்டிவிதான் மாறி மாறி முதலிடத்தை பிடிக்க போராடி வருகின்றனர். வித்தியாச சீரியல்கள் முதல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து புதுமையானவற்றை ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் சன் டிவியின் டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில், விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் தற்போது புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. மகாநடிகை என்ற பெயரில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொகுத்து வழங்க இருக்கிறார்.

ஏற்கனவே விஜய் டிவியில் கதாநாயகி என்ற ரியாலிட்டி ஷோவின் கான்செப்ட்டை மையமாக வைத்து மகாநடிகை ஒளிபரப்பப்பட இருக்கிறது. உன் எண்ணம் எவ்வளவு தூரமோ, உன் வாழ்க்கையும் அவ்வளவு தூரம் என்ற டேக்லைனுடன் புரோமோ வைரலாகி வருகிறது.



Related Articles
Next Story
Share it