சின்னத்திரை ரகுவரனே இவங்கதான்.. ‘இலக்கியா’ சீரியலில் இவங்களுக்கா இப்படி?
சின்னத்திரையில் இவங்களை விட்டால் வில்லி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிப்பவர் யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் இவர் வில்லி கதாபாத்திரத்திலேயேதான் நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. நடிகை ராணி. தன்னுடைய கர்ஜனையான குரலாலும் ஸ்டைலான நடிப்பாலும் வசனத்தை கெத்தாக பேசுவதிலும் ஒரு சிறந்த நடிகைதான் ராணி.
பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டரிகளிலேயே நடித்து வரும் ராணி முதன் முதலில் அலைகள் சீரியலில்தான் அறிமுகமானார். அப்போது அவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு மகன் இருந்தார். இப்போது அவருக்கு ஒரு மகன், ஒரு மகன் இருக்க, மகன் இன்ஜினியர் படித்து முடித்துவிட்டு வேலை பார்த்து வருகிறாராம்.
மகள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாராம். சீரியலில்தான் எப்போதும் கோபத்துடனேயே இருக்கிறார் என்றால் நிஜத்திலும் அப்படியேதான் பேசினார் ராணி. அதற்கு காரணம் அவருடைய அப்பாதான் என்றும் கூறியிருக்கிறார். ஏனெனில் அவரின் அப்பா சின்ன வயதில் இருந்தே ‘பொம்பள பிள்ளைங்க சத்தமா பேசக் கூடாது. சத்தமா சிரிக்கக் கூடாது’ என்று சொல்லியே வளர்த்தாராம்.
அதனால்தான் எனக்கு ஜோக் அடித்தாலும் டபுள் மீனிங்கில் பேசி கிண்டல் செய்தாலும் அதை புரிந்து கொள்ள தெரியாது. அதனால் சிரிக்கவும் மாட்டேன் என்று மிகவும் வெகுளியாக அந்தப் பேட்டியில் கூறினார் ராணி.
ஒரு வில்லனாக அனைத்து முன்னணி நடிகர்களையும் தன் நடிப்பால் ஆட்டம் கண்டவர் ரகுவரன். அதை போல் சின்னத்திரையில் உண்மையிலேயே ராணியாக வலம் வந்தார் இந்த நடிகை ராணி. இவர் நடிக்கும் சீரியல்களில் இவரை ரசித்து பார்க்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் இலக்கியா. நண்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிக்க ராணியைத்தான் அழைத்தார்களாம். ஆனால் சொன்ன நேரத்தையும் தாண்டி அதிகமாக நடிக்க வேண்டியதாக இருந்ததாம். அதுமட்டுமில்லாமல் ஒழுங்கான மரியாதையும் கொடுக்க வில்லையாம். இதன் காரணமாகவேதான் இலக்கியா சீரியலில் நடிக்க வில்லை என்று கூறினார் ராணி.
இவர் கூறுவதை பார்க்கும் போது இலக்கியா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பைரவி கேரக்டருக்குத்தான் அணுகியிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்போது டிடி தமிழில் ராடன் நிறுவனம் தயாரிக்கும் தாயம்மாள் குடும்பத்தார் சீரியலில் ராதிகாவுக்கு எதிர் கேரக்டரில் நடித்து வருகிறாராம் ராணி.