மீனாவுக்கு பின்னப்படும் சதிவலை… சிக்குவாரா? தப்பிப்பாரா? மாமியாரே நீங்களுமா?

by ராம் சுதன் |
மீனாவுக்கு பின்னப்படும் சதிவலை… சிக்குவாரா? தப்பிப்பாரா? மாமியாரே நீங்களுமா?
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

மீனாவிற்கு கிடைத்த ஆர்டர் குறித்து குடும்பத்தினரிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ரோகிணி ஸ்ருதியிடம் மீனா டெவலப் ஆகிட்டே போறாங்க எனக் கூற போகட்டும் நல்லதுதானே என்கிறார். கொளுத்து போட்டது வீணா போசே எனக் கலாய்க்கிறார் முத்து.

பின்னர் கிச்சனில் மீனா மற்றும் முத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்த ஆர்டருக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் செலவாகும் எனக் கூற என்னிடம் கொஞ்சம் இருப்பதாக முத்து கூறுகிறார். இல்லை நானே சமாளிச்சிக்கிறேன். வேண்டும் என்றால் உங்களிடம் வரேன் என்கிறார் மீனா.

ரூமில் விஜயா இருக்க அப்போ சிந்தாமணி கால் செய்கிறார். எங்க இருக்கீங்க எனக் கேட்க வீட்டில் தான் இருக்கேன். அந்த மீனாவுக்கு பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்து இருப்பதாக கூற ஆமா பண்ணட்டும் என்கிறார் சிந்தாமணி. ஏன் எனக் கேட்க இதான் லாஸ்ட். இனி அவ காலிப்ளவர் தான் செய்வா என்கிறார்.

உடனே விஜயாவும் சந்தோஷமாகி சாப்பாடுக்கே காலி பிளவரை வாங்கி வந்து மீனாவை சமைக்க சொல்கிறார். பரசு கறியுடன் வர என்னவென விசாரிக்கிறார் அண்ணாமலை. மாப்பிள்ளை தாய் மாமா 4 கிலோ கொண்டு வந்தார். அதான் உனக்கு 2 கிலோ எடுத்துட்டு வந்தேன் என்கிறார். கல்யாண விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது 1 லட்சம் குறைவதாக சொல்ல அதை தான் தருகிறேன் என்கிறார் அண்ணாமலை.

பரசு கிளம்பி 2 கிலோ கறியை கொடுத்து 1 லட்சம் பில் போட்டு போய்ட்டாரே என மனதில் விஜயா நினைக்கிறார். முத்துவிற்கு தமிழ்நாட்டு முழுவதும் லண்டனில் இருந்து வந்தவருக்கு கோயில்களை சுற்றி காட்டும் ஆர்டர் கிடைக்கிறது. அவரும் இங்கிலீஷில் பேசுகிறார்.

பின்னர் இதை பார்க்கும் மீனா நீங்களும் படிச்சிருக்கலாம் எனக் கூற அப்போ நீ கிடைச்சிருக்க மாட்டியே என்கிறார். அண்ணாமலை முத்துவை அழைத்து பரசுக்கு கொடுக்கும் காசு குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

Next Story