Siragadikka Aasai: சீதாக்கு கல்யாணம்… மீனாக்கு டைவர்ஸ்… என்ன முடிவெடுக்க போகிறார் முத்து?

Published on: August 8, 2025
---Advertisement---

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார புரோமோ வெளியாகி மீனாவை கழுவி ஊற்றி கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள்.

சிறகடிக்க ஆசை சீரியல் பெரும்பாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற சீரியல். இந்த சீரியல் கடந்த சில மாதங்களாகவே பெரும்பாலும் சம்மந்தமில்லாத கதைக்களத்தால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாரித்து வைத்து இருக்கிறது.

சீரியலின் ஹீரோ முத்துவுக்கான பிளாஷ்பேக் இன்னும் சொல்லப்படவில்லை. நெகட்டிவ் கேரக்டரான ரோகிணியின் பித்தலாட்டங்கள் பெரிய அளவில் உடையவில்லை. மனோஜுக்கு அத்தனை தப்பு செய்தும் பிரச்னை எதுவும் வரவில்லை.

ஆனால் ஹீரோ ஹீரோயினுக்கான சண்டை மட்டும் ஓயாமல் இருக்கிறது. தற்போது மீனாவின் தங்கை சீதா கான்ஸ்டபிள் அருணை காதலித்தார். ஆனால் முத்துவிற்கும் அருணுக்கும் இருக்கும் பிரச்னைகளால் அவர் இந்த காதலை எதிர்த்தார்.

முதலில் மாமாவின் சம்மதத்தை எதிர்பார்த்த சீதா தற்போது அருணின் முடிவுப்படி பதிவு திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அப்பா இருந்தால் என் வாழ்க்கையை பிறர் முடிவு எடுப்பார்களா என சீதாவின் கவலையால் மீனா அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொள்கிறார்.

அதன்படி, இந்த வார புரோமோவில் சீதா மற்றும் அருண் கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டார். பின்னர் வெளியில் வரும் போது அதே அலுவலகத்திற்கு முத்து மற்றும் முருகன் வருகின்றனர். அவர் முன் வருகிறார் மீனா. ஆனால் இப்போது இந்த ரகசியம் உடையாது.

தெரிந்தவர்களுக்கு மாலை கொடுக்க வந்ததை கூறி சமாளித்து விடுவார். ஆனால் இதே போன்று ஸ்ருதி ரவி கல்யாணத்துக்கு கையெழுத்து போட்டதற்கே முத்து பெரிய பிரச்னை செய்து இருக்கிறார். இங்கு அவருக்கு பிடிக்காத அருணிற்கு சீதாவை திருமணம் செய்து வைத்ததற்கு என்ன செய்ய போகிறார்.

இந்த டிராக் ரசிகர்களுக்கே வெறுப்பை அதிகரித்து மீனாவை கழுவி ஊற்றி வருகின்றனர். ஹீரோயினை இப்படி விமர்சிப்பது அரிதுதான் போல.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment