அமரனும் இல்ல… கோட்டும் இல்ல… வேட்டையன் செய்த பக்கா சம்பவம்… சூப்பர்ஸ்டாருனா சும்மாவா?
Vettaiyan: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் விஜய் மற்றும் அமரனை தூக்கி சாப்பிட்டு பல்ப் கொடுத்திருக்கும் நிகழ்வு நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார். இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் நடித்திருந்தார்.
பிரசாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் டிராவல் படம் எனக் கூறப்பட்ட நிலையில் படம் சாதாரண பழிவாங்கல் கதையாக மட்டுமே அமைந்திருந்தது. விஜய்காந்த் இப்படத்தில் ஏஐ மூலம் கொண்டு வரப்பட்டு இருந்தார்.
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் 500 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை செய்தது. தொடர்ந்து வெளியான வேட்டையன் திரைப்படம் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியானது. லைகா தயாரிப்பில் இப்படம் ரஜினியின் படமாகவோ இல்ல ஞானவேல் படமாகவோ இல்லை.
இரண்டு சேர்ந்த கலவை என்பதால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ரஜினி ரசிகர்களும் அதிருப்தியை அடைந்த நிலையில் இப்படத்தின் வசூல் 300 கோடியை கூட நெருங்க வில்லை. இப்படத்தினை தொடர்ந்து வெளியானது சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் இப்படம் மேஜர் முகுந்த் மற்றும் அவர் மனைவி இந்து ரபேக்கா வர்க்கீஸின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. வசூல் சாதனை குவித்தது. கோட் போலவே 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போ இந்த இரண்டு படங்களை மீண்டும் ரஜினிகாந்தின் வேட்டையன் முந்தி இருக்கிறது. இந்த வருட தை பொங்கல் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான வேட்டையன் திரைப்படத்துக்கு 11.6 டிவிஆர் ரேட்டிங் கிடைத்துள்ளது.
ஆனால் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட கோட் படத்துக்கு 9.1 டிவிஆர் ரேட்டிங்கும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமரன் படத்துக்கு 8.5 டிவிஆர் ரேட்டிங் மட்டுமே கிடைத்துள்ளது. சூப்பர்ஸ்டாரை இதுல கூட தோக்கடிக்கவே முடியலையே என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.