1. Home
  2. Latest News

விக்ரமன் உள்ளாடையுடன் குடியிருப்பில் அப்படி சுற்றியது ஏன்?.. மனைவி கொடுத்த பரபரப்பு விளக்கம்!..


பிக் பாஸ் விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையை அணிந்து கொண்டு குடியிருப்பு ஒன்றில் ஓடியதாக பரவிய காட்சிகள் பெரும் பரபரப்பை எழுப்பிய நிலையில், விக்ரமன் மனைவி அதற்கு மீடியா முன்பாக விளக்கம் கொடுத்து அந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன் போல நீதி நேர்மை என பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விக்ரமன். அந்த சீசனில் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும் என திருமாவளவன் வரை ட்வீட் போட்டு வாக்கு சேகரித்தார்.


ஆனால் கடைசியில் விக்ரமனுக்கு பதிலாக அசீம் அந்த சீசன் டைட்டிலை தனதாக்கி கொண்டார். விக்ரமன் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்த பிரிதி கரிகாலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு வாடகைக்கு சென்றனர். இந்நிலையில், விக்ரமன் உள்ளாடை அணிந்தபடி இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை கிளப்பியது.

சில செய்தி சேனல்களும் விக்ரமனின் லீலைகள் அம்பலம் என அந்த வீடியோவை வெளியிட நேற்று முழுவதும் சோஷியல் மீடியாவில் விக்ரமனுக்கு எதிராக பிக் பாஸ் ரசிகர்கள், டைட்டில் வின்னரான அசீம் என அனைவரும் ரவுண்டு கட்டினர்.

இந்நிலையில், தனது கணவரை வைத்து தான் படம் எடுத்து வருவதாகவும் அந்த படத்திற்கான ஒத்திகைதான் அங்கே பார்க்கப்பட்டது என்றும் அவர் எந்த தவறும் செய்யவில்லை. கடந்த மே மாதம் இந்த விஷயம் நடந்தது. அதன் பின்னர் நாங்கள் அந்த ஏரியாவையும் காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்தில் வசித்து வருகிறோம். தற்போது திடீரென தேவையில்லாமல், எனது கணவர் விக்ரமின் மீது வீண்பழி சுமத்தியுள்ளனர் என பத்திரிகையாளர் சந்திப்பில் விக்ரமன் மனைவி கூறியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் விரைவில் போலீசார் இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் விக்ரமன் மற்றும் அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.