Connect with us
rat_main_cine

television

மூக்குத்தி முத்தழகி!.. பக்கா ப்ளானோட தான் இருந்திருக்காரு!.. கிளுகிளுப்பில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர்!..

விஜய்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக இருக்கும் தொடர்களில் முக்கியமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. 6 வது சீசனில் தடம் பதித்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி வருகிறது.

இதை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே கடைசி வார நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் நாசுக்காக சொல்லியிருப்பார். இப்படியே விளையாடினீர்கள் என்றால் இருக்கிற சீசனில் இந்த சீசன் தான் மிகவும் மோசமான சீசன் என்று அறிவுரை வழங்கியிருப்பார்.

rat1_cine

robert

மேலும் ரசிகர் ஒருவரும் சக போட்டியாளரான அசீம் மற்றும் தனலட்சுமி இல்லையென்றால் வீடே மிகவும் போர் அடித்து விடும் என்றும் கூறியிருந்தார். மேலும் கடைசி எலிமினேஷனாக வெளிவந்த ராபர்ட் மாஸ்டர் வெளியில் வந்ததும் ரசிகர்களை பேட்டியின் முன் சந்தித்தார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ரசிகர்களை ஏமாற்ற பயன்படுத்தும் டாப் 5 டிரிக்ஸ்கள்… இது எப்படி தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் அவருடைய க்ரஷாக இருந்தவர் நடிகை ரட்சிதா. அவரை செல்லமாக மூக்குத்தி என்றே அழைக்கிறார் ராபர்ட். அது பார்க்கவே அவ்ளோ அழகாக இருக்கிறது என்றும் கண்ணுக்கு கூலாக எதாவது இருக்கனும்ல அந்த வகையில் தான் ரட்சிதா எனக்கு என்று வெளிப்படையாக கூறினார்.

rat2_Cine

robert

மேலும் ஏற்கெனவே ராபர்ட்டுக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்க வீட்டிற்குள் நடக்கும் இந்த கில்மாவால் கதிகலங்கிய அந்த கேர்ள் ஃபிரண்ட் நானும் இங்கு இருக்கேன் என்பதை நியாபகப்படுத்துவதற்கு ராபர்ட்டுக்கு மோதிரம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதை பார்த்ததும் ராபர்ட்டுக்கும் சரி ரட்சிதாவிற்கும் சரி ஷாக்.

ஆனாலும் அதன் பிறகு ராபர்ட் அடங்கவே இல்லை. அவர் வேலையை மீண்டும் காட்ட தொடங்கினார். இதை பற்றி கேட்டபோது மோதிரம் வந்ததும் உடனே மாறினால் எனக்கும் ரட்சிதாவிற்கு இருக்கும் அந்த நெருக்கம் உண்மையாகி விடும். அதனால் தான் எப்பவும் போல இருந்தேன் என்று கூறினார். ஆனால் இதெல்லாம் தவறு இல்லை. என் கேர்ள் ஃபிரண்டுக்கும் கிரஷ் இருக்கிறார். அவருடன் என் முன்னாடியே பேசிக்கொண்டு தான் இருக்கிறார். நான் தப்பாக நினைக்கவில்லை. அதே போல தான் ரட்சிதா வெளியில் வந்ததும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்க போகிறேன் என்று கூலாக கூறினார்.

rat3_cine

robert

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in television

To Top