Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் ரசிகர்களை ஏமாற்ற பயன்படுத்தும் டாப் 5 டிரிக்ஸ்கள்… இது எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில காட்சிகளுக்கு நடிகர்களுக்கு பதில் டூப் போட்டு எடுப்பார்கள். அதுப்போல சில பிரபலமான காட்சிகளில் கூட சில ட்ரிக்ஸை பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் நீங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்களின் சின்ன ரீகேப் உங்களுக்காக,

நிறைய சினிமா காட்சிகளில் தலையில் பீர் பாட்டிலை உடைக்கும் படி காட்சிகள் இருக்கும். இது உண்மையான கண்ணாடி பாட்டில்கள் இல்லை. அதன் அச்சில் பிளாஸ்டிக் அல்லது சுகர் கிளாஸ் மெட்டிரியலில் ஒரு பாட்டிலை செய்து விடுவார்களாம். அதை வைத்து வில்லனை அடிக்கும் போது உடனே உடைந்தும் விடும். மனிதர்களும் சேதாரம் ஆகாமல் தப்பிப்பார்கள்.

kushboo

சின்னத்தம்பி படத்தில் உடைந்த கண்ணாடி துண்டுகளில் குஷ்பூ நடந்து கொண்டே ஒரு பாடலுக்கு நடித்திருப்பார். அது எல்லாம் ரப்பரால் செய்யப்பட்ட கண்ணாடி துகள்கள் தானாம். இது இம்மி அளவு ரத்தத்தை கூட நமக்கு வர வைக்காது. ஆனா, குஷ்பூ மேடம் இதுக்கா அந்த பாட்டுல அப்படி சீன் காட்டுனீங்க.

இதையும் படிங்க: நவரச நாயகனின் மோக வலையில் சிக்காத ஒரே நடிகை இவங்கதானாம்!!… ஓப்பனாக போட்டுடைத்த சினிமா விமர்சகர்…

சினிமாவில் ரத்தம் தெறிக்க வரும் துப்பாக்கி துண்டுகள் கொண்ட காட்சிகளை எடுப்பதில் சில டெக்னிக் இருக்காம். அதாவது ஒரு ட்யூப்பில் போலியான ரத்தத்தினை நிரப்பி குண்டு வாங்க போகிறவரின் உடலில் வைத்து கட்டி விடுவார்களாம். பின்னர் அந்த ட்யூப்பில் காற்றை நிரப்பி ப்ரஷருடன் இருப்பது போல பார்த்து கொள்வார்கள். காட்சி ஆரம்பித்தவுடன் அந்த ட்யூப்பின் ப்ரஷரை வெளியேற்றும் போது ரத்தம் தெறிக்க அவருக்கு குண்டு பட்டத்தை போல காட்சி அமையும்.

Vijay

படங்களில் ஸ்டேடியமில் 60000 பேர் இருப்பது போல காட்டப்பட்டதும் போலி தானாம். 20 அல்லது 30 பேரை க்ரீன் மேட்டில் வைத்து படமாக்கி விட்டு அதை 60000 சீட்டில் நிரப்பி விடுவார்களாம்.

பழைய சினிமாக்களில் பிறந்த குழந்தையை காட்டும் போது அது பொம்மை அல்லது வெறும் துணி என அப்பட்டமாக தெரியும். ஆனால் தற்போது சினிமாவில் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரு ட்ரிக் இருக்கிறதாம். சிலிக்கான் மோல்டில் செய்யப்பட்ட ஃபேக் பேபிஸை தான் பயன்படுத்துகிறார்கள். நண்பன் மற்றும் சாமி2 படங்களில் இருந்ததும் இதை சிலிக்கான் பேபிஸ் தானாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top