என் பையனுக்கு தம்பி கதாபாத்திரம் இருந்தா சொல்லு… தளபதி விஜய்காக வாய்ப்பு கேட்டு நின்ற SAC.!

Published on: July 18, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எவ்வளவு கஷ்டங்களை தாண்டி தற்போது உச்சத்தில் இருக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இவருடைய திரைப்பயண வாழ்க்கையில், அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஏனென்றால், விஜய்யை எப்படியாவது பெரிய ஹீரோவாக தமிழ் சினிமாவில் மாற்றவேண்டும் என நினைத்து அவரை வைத்தே பல படங்களை இயக்கி இருந்தார்.

அதன் பிறகு தனது மகனுக்காக கச்சிதமான கதைகளை கேட்டு தேர்வு செய்தது. என தன் மகன் விஜய்க்காக பல விஷியங்களை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்துள்ளார். இந்த நிலையில், விஜய்யை பார்த்திபன் இயக்கும் படங்களில் நடிக்க வைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் வாய்ப்பு கேட்டுள்ளாராம்.

இதனை, இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “ரொம்ப வருடத்திற்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் எங்கள் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்கு விஜய்யை கூப்பிட்டு வருவார்.

இதையும் படியுங்களேன்- சூப்பர் ஸ்டார் செய்த சேட்டைகள்… பொண்ணுங்க முன்னாடி தலைவர் என்னவெல்லாம் செஞ்சிருக்கார் பாருங்க..

அப்போது தான் விஜய் வளர்ந்து வந்த தருணம், ஒரு நாள் என்னிடம் என்னுடைய பையனுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து விடுங்க, ஒரு படத்தில் தம்பி மாதிரி போடுங்களேன் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னார்.

விஜய்யை அவர் சினிமாவுக்கு கொண்டுவந்தது பெரிய திரைக்கதை. விஜயகாந்த் சார் படத்துல.. விஜய்யை கொண்டு வந்தது.. ஒரு சிறிய சிறிய ரோலில் விஜய்யை கொண்டு வந்தது பெரிய விஷயம். ஆனால், பெரிய ஹீரோவாக வளர்ந்த பிறகு அவுங்களே அவுங்களுக்கான விஷயங்களை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் வாய்ப்பு எல்லாம் கேட்டிருக்கிறாரா..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.