Cinema News
லியோ படத்தை வெளியிட தடை!.. சோதனை மேல் சோதனை!.. கொஞ்சம் கேப் விடுங்கப்பா!…
Leo vijay : லியோ திரைப்படத்தை எந்த நேரத்தில் துவங்கினார்களோ அந்த திரைப்படம் தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகும்போது பல பிரச்சனைகளும் கூடவே வருகிறது. தலைவா படத்தில் டைட்டிலுக்கு கீழ் ‘Time to Lead’ என போட்டதால் படத்தை 2 நாட்கள் வெளியிடவிடாமல் அப்போதைய முதல்வர் தடுத்தார் என சொல்லப்பட்டது.
அதன்பின்னரும் விஜய் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். மெர்சல் படத்தின் இறுதி காட்சிகள் ஜி.எஸ்.டி பற்றி அவர் ஒரு வசனம் பேச, மாஸ்டர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த அவரை வருமான வரித்துறையினர் தூக்கிக்கொண்டு சென்னைக்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர் தெரியுமா?.. டி. இமானை தொடர்ந்து அவரது முதல் மனைவி ஓபன் பேட்டி!..
லியோ படம் முடிந்து தயாரான பின் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாமல் போனது. கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதால் அது ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இது. விஜயின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
அதன்பின் சேட்டிலைட் ஒப்பந்தத்தால் ஹிந்தி மொழியில் இப்படத்தை வெளியிட முடியாமல் போனது. இப்படத்தின் ‘நான் வரவா’ பாடலில் நடனமாடிய 1200 பேர் தங்களுக்கு சொல்லப்பட்ட சம்பளத்தை கொடுக்கவில்லை என புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பு நீதிமன்றத்தை நாடியும் 4 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த லியோ படத்தின் கதை? அப்போ சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் இந்த உறவு தானா?
இந்நிலையில், ஆந்திராவில் லியோ படத்தை வெளியிட இப்போது புதிய சிக்கல் உருவாகியிருக்கிறது. லியோ படத்தை தெலுங்கு மொழியில் அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது. இப்படத்தின் தலைப்பான ‘லியோ’ தங்களுடையது என டி ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, வாரிசு படத்தை லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆந்திராவில் வெளியிட்டதில், வாரிசு பட தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதோடு, தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் லியோ படத்துக்கும் ரெட்கார்டும் விதிக்கப்பட்டது . அந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டபின் தற்போது புது பிரச்சனை முளைத்துள்ளது. இதுவும் பேசி தீர்க்கப்படும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்