கோலிவுட் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். அமராவதி படத்தில் நடிக்க துவங்கிய அஜித் இதுவரை 63 படங்களில் நடித்து முடித்து விட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது..
அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள நிலையில் தயாரிப்பாளர் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஏனெனில் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டார்.. அதோடு மீது செலவு 115 கோடி, மொத்த பட்ஜெட் 300 கோடி வருவதால் தமிழ்நாட்டில் எந்த தயாரிப்பாளரும் கிடைக்கவில்லை..
எனவே மும்பை சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார்கள்.. சமீபத்தில் மும்பையை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அஜித்துக்கு 50 கோடி அட்வான்ஸ் மற்றும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது..
ஆனால், தற்போது இந்த படம் தொடர்பாக ஒரு புதிய செய்தி வெளியாகியிருக்கிறது.. தெலுங்கில் பல படங்களை தயாரித்துள்ள AK Entertainments அனில் சுங்கரா இந்த படத்தை தயாரிக்கப் போவதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.. இவர் மகேஷ் பாபுவை வைத்து சில படங்களை தயாரித்திருக்கிறார். இந்த செய்தி உண்மையா என்பது விரைவில் தெரிந்து விடும்..




