ரெண்டு கிரைம்…. பக்காவா முடிச்சு போட்டுருக்காங்களே..! டென் ஹவர்ஸ் சிபிராஜிக்குக் கம்பேக் கொடுக்குமா?

by sankaran v |   ( Updated:2025-04-18 05:45:47  )
10 hours movie
X

10 hours movie

Ten Hours review: இன்று புரட்சித்தமிழன் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த 10 ஹவர்ஸ் படம் வெளியாகி உள்ளது. படம் குறித்த பாசிடிவ், நெகடிவ் என்னென்னு பார்க்கலாமா?

சிபிராஜ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு பொண்ணு கடத்தப்படுகிறாள். அவளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் சிபிராஜ். அன்னைக்கு நைட்டே இவரைத் தேடி ஒரு வழக்கு வருகிறது. ஓடும் பேருந்தில் இருந்து ஒரு நபரை அடிச்சிக் காயப்படுத்துறாங்கன்னு புகார் வருது. வந்து காப்பாத்துங்கன்னு சொல்றாங்க. இந்த 2 பிரச்சனையையும் எடுத்துக்கிட்டு களத்தில் இறங்குகிறார்.

அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை. படத்தின் இடைவேளைக்குப் பிறகு பரபரப்பு நம்மை பதைபதைக்க வைக்கிறது. டுவிஸ்டும் நிறைய இருக்கு. இந்த 2 கிரைமுக்கும் என்ன சம்பந்தம் என்று இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் அருமையாக எடுத்துள்ளார்.

படத்தின் பலமே செகண்ட் ஆஃப் தான். சிபிராஜ் அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ அதைக் கனகச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்குக் கிடைச்ச ஒரு சில தகவல்களை வைத்து அந்தக் கேஸை அடுத்தடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு போகிறார் என்பதை அருமையாக எடுத்துள்ளார் இயக்குனர்.

திலீபன், ஜீவாரவி, கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ்னு எல்லாரும் அருமையா நடிச்சிருக்காங்க. படத்தின் செகண்ட் ஆஃப்ல பஸ் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. டெக்னிக்கலாவே பல இடங்களில் அருமையாக செஞ்சிருக்காங்க. 10 மணி நேரத்துக்குள் நடக்கும் கதை என்பதால் ரசிகனை சீட்டின் நுனிக்குக் கொண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர். கேஎஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார்.

இவ்வளவு பெரிய சம்பவம் நடக்குது. அதனால இதுக்குப் பின்னாலே பெரிய கதாபாத்திரம் இருக்கும்னு பார்த்தா சப்புன்னு போகுது. அந்த வில்லனுக்கு அவ்ளோ வெயிட் இல்லாமல் போயிடுச்சு. அதுதான் மைனஸ். சிபிராஜிக்கு இது ஒரு கம்பேக்காக அமையுமான்னு பார்க்கலாம். இது குடும்பத்தோடு பார்க்கலாம்.

Next Story