Test: மொக்கை கதை… நல்லவேளை கிரிக்கெட்டை அப்படிக் காட்டல… டெஸ்ட் படத்தை வறுத்தெடுத்த புளூசட்டை மாறன்

test blue satta
டெஸ்ட் படம் நேற்று ஓடிடியில் வெளியானது. படம் எப்படி இருக்கு? புளூசட்டை மாறன் சொல்ற விமர்சனம் இதுதான்.
மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்த படம் டெஸ்ட். இயக்குனர் சசிதரன். மாதவனும், நயன்தாராவும் காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்குறாங்க. பல வருஷங்களாகியும் குழந்தை பிறக்கல. செயற்கை முறையில பிறக்க 5 லட்சம் செலவாகும். மாதவன் மாற்று எரிசக்தியைக் கண்டுபிடிக்கிற விஞ்ஞானி. அதைக் கண்டுபிடிச்சிடறாரு.
அதுக்கு 50 லட்சம் ரூவா கடன் வாங்கிடுறாரு. கடன்காரன் துரத்திக்கிட்டு இருக்கான். இதுக்கு அப்புறம் அந்த எரிசக்திக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கணும்னா மந்திரி 5 கோடி ரூபாய் கேட்குறாரு. அதுக்கு ரெடி பண்ணனும். இந்த பிரஷர்ல மாதவன் சுத்திக்கிட்டு இருக்காரு. இன்னொரு பக்கம் சித்தார்த் பெரிய கிரிக்கெட் வீரர்.
அவரு இப்போ பார்ம்ல இல்ல. நடக்கப்போற இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்ல ஜெயிக்கலன்னா அவரு சீட்டைக் கிழிச்சிடுவாங்க. அப்படி ஒரு சூழ்நிலை. கிரிக்கெட்ல மேட்ச் பிக்ஸிங் பண்ற டீம் சித்தார்த்தைக் கட்டம் கட்டுது. மாதவனுக்கும், சித்தார்த்துக்கும் ஒரே எதிரிதான். மாதவனுக்கு 50 லட்ச ரூபா கொடுத்த பார்ட்டிதான் சித்தார்த்தையும் மேட்ச் பிக்சிங்ல கொண்டு வர நினைக்குது.
இதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஸ்போர்ட்ஸ் டிராமான்னு சொல்லலாம். படத்துல மையக்கதை சரியில்லன்னாலும் இடையிடையே ஸ்போர்ட்ஸ் வந்து காப்பாத்தி விட்டுரும். தங்கல், லப்பர்பந்து அந்த வகைதான். ஆனா உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு 2 பக்கமும் இடிங்கற மாதிரி இந்தப் படத்துல மையக்கதையும் சரியில்ல. ஸ்போர்ட்ஸ்சும் சரியில்ல.
ரெண்டுமே மொக்கை. படத்துல வில்லன் கேரக்டர் கந்து வட்டி கொடுக்குது. அதுதான் 5000 கோடிக்கு மேட்ச் பிக்சிங் பண்ணுது. அதே நேரம் பீச் ஓரம் ஒரு ஓலக்கொட்டையில வியாபாரம் பேசுது. அதைப் பார்த்த உடனே சுண்டக்கஞ்சி பிசினஸ் பண்றாரோன்னு பயம் இருந்தது. சும்மா பேருக்குத் தான் மேட்ச் பிக்சிங். அதோட டீட்டெய்ல் இல்ல. படத்துல மாதவனோட மன அழுத்தத்தை சரியாகக் காட்டல.
எவனோ ஒருவன் படம் மாதிரி முகம் மாறுவதுன்னு எதுவுமே இல்லை. படத்துல சித்தார்த் கிரிக்கெட் விளையாடறாரு. இந்தியா, பாகிஸ்தான் மேட்ச். ஆனா 2 பக்கமும் தலா 11 ஆளு வீதம் 22 பேரு விளையாடணும். ஆனா இவரு ஒருத்தரைத் தான் காட்டுறாங்க. இவரே பேட்டிங் பண்றாரு. இவருதான் சிக்சர் அடிக்கணும். இவருதான் கேட்ச் பிடிக்கணும். இவருதான் பவுலிங் பண்ணனும். நல்லவேளை இவரே பவுலிங் பண்ணி, இவரே பேட்டிங் பண்ணி, இவரே சிக்சர் அடிச்சி, இவரே கேட்ச் பிடிக்காம விட்டுட்டாரு.
45 வருஷத்துக்கு முன்னாடி டெஸ்ட் மேட்ச்ல ஓபனிங்ல கவாஸ்கர் இறங்குவாரு. 5 நாள் கழிச்சித்தான் பர்ஸ்ட் இன்னிங்ஸ் முடியும். அப்ப தான் இவரும் பேட்டைக் கொடுத்துட்டுப் போவாரு. அந்த கிரவுண்ட்ல புறா அப்படியே மேஞ்சிக்கிட்டு இருக்கும். பால் நம்மக்கிட்ட வரும்னாதானே அது அந்த இடத்தை விட்டுப் போகும்.
இவங்களும் அப்படியே தடவித் தடவி அந்த பிட்சுக்குள்ளேயே அடிச்சி விளையாண்டுக்கிட்டு இருப்பாங்க. அந்த மேட்சையும் 5 நாளா லீவு போட்டு பொறுமையா பார்ப்பாங்க. அந்தப் பொறுமை இருந்தா வீட்டுல இருந்து டெஸ்ட் படத்தைப் பாருங்க. விளையாடிக்கிட்டே இருப்பாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.