thai kizhavi collection

தமிழ் சினிமாவில் குடும்ப பின்னணி கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக ஆதரவைப் பெற்று வரும் திரைப்படம் ‘தாய்கிழவி’. பாசமும், நகைச்சுவையும் கலந்த இந்தப் படம், விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

வசூலில் அதிரடி காட்டும் ‘தாய்கிழவி’

திரையரங்குகளில் வெளியானது முதல் ஒவ்வொரு நாளும் வசூலில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. பிரபல வசூல் இணையதளமான Sacnilk வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி:

5-வது நாள் வசூல்: வார நாட்களிலும் குறையாத வரவேற்பால், நேற்று மட்டும் சுமார் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

மொத்த வசூல் (5 நாட்கள்): படம் வெளியான ஐந்து நாட்களில் இதுவரை இந்திய அளவில் மொத்தம் 19 கோடியே 30 லட்சம் ரூபாயை அள்ளி சாதனை படைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான ஒரு திரைப்படம், முதல் வாரத்திலேயே 20 கோடி ரூபாயை நெருங்குவது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கிய முதல் படத்திலேயே அனைவரின் பாரட்டையும் பெற்றுவிட்டார். சிவகார்த்திகேயன் இப்படத்தை வெளியிட்டது கூடுதல் கவனத்தை பெற்றது. ஷான் ரோல்டன்பின்னணி இசை மற்றும் கிராமத்து மணம் மாறாத பாடல்கள் படத்தின் உணர்வுகளுக்கு வலு சேர்த்துள்ளன.

வெற்றிக்குக் காரணம் என்ன?

ஆக்ஷன் மற்றும் மாஸ் படங்கள் மத்தியில், ஒரு அழகான குடும்பக் கதையைப் பார்த்த திருப்தியை இந்தப் படம் தருவதாக மக்கள் கருதுகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கான கூட்டத்தை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்துள்ளது. இதே வேகம் தொடர்ந்தால், வரும் வார இறுதியில் ‘தாய்கிழவி’ 30 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.