கமல்ஹாசனின் மார்க்கெட் எகிறியதால் இயக்குனருக்கு வந்த சோதனை… ஒரே மர்மமா இருக்கேப்பா!!

by Arun Prasad |
Kamal Haasan
X

Kamal Haasan

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளிவந்திருந்த நிலையில் தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்திற்கு பின் கமல்ஹாசனின் மார்க்கெட் வேல்யூ வேறு தளத்திற்கு சென்றுவிட்டதாக கூட கூறலாம். கிட்டத்தட்ட 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது இத்திரைப்படம்.

Vikram

Vikram

கமல்ஹாசன் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. “இந்தியன் 2” திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் மணி ரத்னம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் ஹெச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோருடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கமல்ஹாசன், மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்திரைப்படத்திற்கு “தேவர் மகன் 2” என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்திருந்தது.

Kamal Haasan and A.R.Rahman

Kamal Haasan and A.R.Rahman

அதற்கு முன் கமல்ஹாசன் “தலைவன் இருக்கின்றான்” என்ற திரைப்படத்தில் நடித்து இயக்க உள்ளதாகவும் அத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வந்திருந்தது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படத்தின் நிலை குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர்…

“கமல்ஹாசன் திரைப்படங்களுக்கான வியாபாரம் தற்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதலால்தான் அந்த தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தை தொடங்குவதிலே கமல்ஹாசனின் நிறுவனத்திற்கு ஒரு சின்ன தயக்கம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: மைக் மோகனால் மகளிர் கல்லூரியாக மாறிப்போன மருத்துவமனை… வாழ்ந்தா இப்படில வாழனும்…

Mahesh Narayanan

Mahesh Narayanan

மேலும் பேசிய அவர் “அந்த படத்தை இயக்க இருப்பவர் மகேஷ் நாராயணன். அவர் இயக்கத்தில் உருவாகின்ற இந்த படத்தை இன்றைக்கு கமல்ஹாசனின் படத்திற்கு என்ன வியாபாரம் இருக்கிறதோ, அந்த விலைக்கு விற்பது கொஞ்சம் கடினம் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அத்திரைப்படம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது என்பது என்னுடைய எண்ணம்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து “தலைவன் இருக்கின்றான்” திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளதாக தெரியவருகிறது.

Next Story