வாவ் செம மெர்சலா இருக்கே!.. தலைவர் 170 லுக்குல ரஜினிய பாருங்க!.. வெளியான புகைப்படம்..

Published on: October 4, 2023
---Advertisement---

Thalaivar 170 : ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ள ரஜினி அதே உற்சாகத்தில் தனது 170வது படத்திற்கு தயாராகி விட்டார். ஜெயிலர் படம் ரூ.700 கோடி வசூலை தாண்டிய நிலையில் தனது அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார். ஜெய்பீம் படம் எப்படி சமூக அவலங்களை பேசியதோ அதுபோலவே இந்த படமும் சமூக பிரச்சனையை அலசும் என சொல்லப்படுகிறது. இந்த கருத்தை விமான நிலையத்தில் ரஜினியும் உறுதி செய்திருந்தார்.

இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

முன்பெல்லாம் ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என 3 முக்கிய நடிகர்கள் மட்டுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஒரு படத்தில் பல நடிகர்களும், நடிகைகளும் நடிக்கிறார்கள். விக்ரம் படம் இந்த விஷயத்தை துவக்கி வைத்தது. அப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்திலும் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஒருபக்கம் பேன் இண்டியா படமாக வெளியிடுவதால் அந்தந்த மொழியிலிலிருந்து ஒரு நடிகரை தூக்கி படத்தில் சொருகி விடுகிறார்கள். ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார், சுனில் ஆகியோரை நடிக்க வைத்தது கூட வியாபார நோக்கத்தில்தான். தற்போது தலைவர் 170 படத்திலும் ஏராளமான நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் பட டைட்டிலை உருவாக்கிய ரஜினி மகள்!.. இதுக்கா செல்லங்களா இப்படி அடிச்சிக்கிட்டீங்க!..

பஹத் பாசில், ரானா, அமிதாப் பச்சன் என பலரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். அதேபோல், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் மற்றும் துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் இப்படத்தின் புதிய தகவல்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

rajini

இந்நிலையில், இப்படத்திற்கான ரஜினி லுக்கை லைக்கா நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் வயதானவராக வந்த ரஜினி இதில் கொஞ்சம் இளமையாக இருக்கிறார். எனவே, ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

இதையும் படிங்க: நடிகனாக இருப்பதை விட அதுதான் பெரிய சந்தோஷம்! ரஜினி சொன்ன சீக்ரெட்

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.