தலைவர் 173 படத்துல ஒரு பஞ்சாயத்து இருக்கு!.. சிபி கையில்தான் எல்லாம் இருக்கு!..

Published on: January 21, 2026
Rajinikanth and Cibi Chakravarthy
---Advertisement---

ரஜினியின் 163 வது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதால் வேறு இயக்குனர்களை தேடி வந்தார்கள். பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சில இயக்குனர்களின் பெயர் அடிபட்டு இறுதியில் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி உறுதியானது.

இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது
. இந்நிலையில்தான் இந்த படத்துக்கு ஒரு புதிய சிக்கல் வந்திருக்கிறது. ரஜினி படத்தில் கமிட் ஆவதற்கு முன் ஃபேஷன் ஸ்டுடியோ சுதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க கமிட் ஆனார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் அந்த படம் துவங்க தாமதமானதால் ரஜினி படத்திற்கு வந்துவிட்டார் சிபி சக்கரவர்த்தி.

ஆனால் சிபி – சிவகார்த்திகேயன் படத்தை வைத்து ஓடிடி, டிவி உரிமை, ரீமேக் உரிமை, இசை உரிமை என தியேட்டர்கள் அல்லாத மற்ற வியாபாரங்களை பேசி முடித்துவிட்டர் சுதன். அந்த வியாபாரத்தின் மதிப்பு 90 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால், சிபி சக்வரத்தி ரஜினி படத்துக்கு வந்துவிட்டதால் அந்த படம் கிடப்பிடில் போடப்பட்டிருக்கிறது. ஆனால், சிபி – எஸ்.கே படத்தின் வியாபாரத்தோடு தொடர்புடையவர்கள் கேள்வி கேட்பார்கள் இல்லையா?.

அவர்களுக்கெல்லாம் சுதன் பதில் சொல்ல வேண்டும். ஒருபக்கம் சுதன் NOC கொடுத்தால்தான் சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்தை இயக்க செல்ல முடியும். சுதனிடம் என்.ஓ.சி வங்குவது சிபியின் கையில்தான் இருக்கிறது. ரஜினி படத்தை முடித்துவிட்டு எப்போது சிவகார்த்திகேயன் படத்தை துவங்குவார் என அவர் சுதனிடம் சொன்னால் மட்டுமே சுதர்சன் NOC கொடுப்பார் என்கிறார்கள்.

இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறது தலைவர் 173!..