நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் முதல் பாகம் ஏற்கனவே சூப்பர் ஹிட்டடித்த நிலையில் ஜெயிலர் 2 மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்திற்கு பின் அதாவது ரஜினியின் 173வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தை சுந்தர்.சி இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் திடீரென சில காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காமல் போனதால்தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.
அதன் பின்னர் வேறு சில இயக்குனர்களிடமும் கதை கேட்டார்கள். அதில் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனை ரஜினி டிக் அடித்ததாக செய்திகள் வெளியானது. மேலும் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது என்றும் சொன்னார்கள். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
எனவே ரஜினி 173வது படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு தலைவர் 173 தொடர்பான முக்கிய அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எனவே, இந்த படத்த இயக்கப்போவது யார் என்கிற விபரம் நாளை காலை 11 மணிக்கு தெரிந்துவிடும். இதன் மூலம் நீண்டநாள் சஸ்பென்ஸ் முடிவுக்கு வருகிறது. இது, ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
