More
Categories: Cinema News latest news

தலைவர்171 படத்தில் அந்த நடிகரா…? 38 வருஷத்துக்கு பின்னர் நடக்க இருக்கும் மேஜிக்…

Thalaivar171: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர்171 திரைப்படத்தில் பெரிய கேப்பிற்கு பின்னர் வெற்றி கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தில் இன்னொரு நடிகை இணைய இருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை கிளப்பி இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் தலைவர்171. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பர்ஸ்ட் லுக்கில் நிறைய ட்விஸ்ட் வைத்து ரிலீஸ் செய்து இருந்தார் லோகேஷ். இதுவும் டைம் மெஷின் படமா இருக்குமோ எனக்  கூட ரசிகர்கள் சந்தேகத்தினை கிளப்பி இருந்தனர்.

இதையும் படிங்க: ஐயோ இத பாக்க ரெண்டு கண்ணும் பத்தாது!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் அஞ்சலி!.

இதுமட்டுமல்லாமல், படத்தின் நடிகை, நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. முன்னதாக நடிகை ஷோபனா இப்படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தலைவர்171 படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. கடைசியாக இருவரும் மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் 38 ஆண்டுகளுக்கு முன்னர் நடித்திருந்தனர். இதில் என்னமா கண்ணு பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இன்றளவும் அப்பாடல் வைரலாகவே இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் முக்கிய கேரக்டருக்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ ஏப்ரல் 22ந் தேதி ரிலீஸாக இருக்கிறதாம். படத்தின் பெயர் கழுகு என வைக்கப்பட இருப்பதாகவும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வேணாம்பா!. அஜித் ஃபேன்ஸ் ரொம்ப கலாய்ப்பாங்க!.. விஜய் நடிக்க தயங்கிய அந்த வேடம்!..

சிவகார்த்திகேயன் நடிக்க இருந்த கேரக்டரில் தான் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

Published by
Akhilan

Recent Posts