தலைவர்171ல் என்ன நடக்க போகிறது?.. தெறிக்க விடும் லோகேஷ் கனகராஜ்!.. சுடசுட அப்டேட்!..

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் தற்போதைய ஹிட் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் அடுத்து அவரின் கேரியர் அப்டேட்களை ரிலீஸ் செய்து இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்களும் வாவ் சொல்ல தொடங்கி இருக்கின்றனர். முக்கியமாக தலைவரின் 171 படத்தின் அப்டேட் தான் வைரலாகி வருகிறது.
எடுத்த எல்லா படமுமே மிகப்பெரிய வசூலை செய்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனராகி இருக்கிறார். ஆனால் அவரின் கடைசி படமான லியோ நல்ல வசூலை குவித்தாலும் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.
இதையும் படிங்க: ரஜினி, கமல், அமிதாப் இணைந்து நடித்த ஒரே படம்!.. அட அது அந்த படத்தோட ரீமேக்!…
இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் 171 படத்திற்கு முன்னர் சொந்தமாக ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தினை தொடங்கி இருக்கிறார். அதில் முதல் படமாக பைட் க்ளப் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது. இதை தொடர்ந்து ஓடிடியில் எல்சியூ தொடர்பான ஒரு ஷார்ட் ப்லிம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் லோகேஷ் அறிவித்து இருக்கிறார்.
அதில் எல்சியூ குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பைட் க்ளப் படத்துக்காக சமீபத்தில் லோகேஷ் பேட்டி கொடுத்து இருந்தார். அதில் பேசும் போது, என் லியோ படம் முடிந்து நான்கு மாதம் கேப் விட்டு இருந்தேன்.
இதையும் படிங்க: ரசிகர்கள் ரசித்த சத்தியராஜின் ஃபேமஸ் வசனம்!.. காரணமே கமல்தான்!.. அட தெரியாம போச்சே!..
தற்போது தலைவர்171 படத்தின் கதையை எழுத இருக்கிறேன். ஒன்று இல்லை இரண்டு மாதத்தில் முடித்து விடுவேன். ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்கி விடும். ரஜினி சார் அடிக்கடி கால் செய்து ஸ்க்ரிப்ட் குறித்து கேட்டுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு எல்லாம் நியாபகத்தில் இருக்கும்.
சின்ன மாற்றம் செய்தால் கூட கண்டுப்பிடித்து விடுவார். இந்த ப்ராஜக்ட் குறித்த அறிவிப்பு வெளியான உடன் முதலில் கமல் சாரிடம் இருந்து தான் வாழ்த்து வந்தது. கண்டிப்பாக இந்த படமும் ஆக்ஷன் கதையாக தான் இருக்கும். ஆனால் என் மற்ற படங்களில் இதை நான் ட்ரை செய்யவே இல்லை. முதலில் இந்த கதையை கேட்ட போது ரஜினி சார் உடனே என்னை கட்டி தழுவிக்கொண்டார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.