தலைவா ஒரு படத்துல ஓகே.. ஓயாம எல்லா படத்துலையும் இதே வேலையா இருக்கீங்க.. தலைவர்171 அப்டேட்..!

Thalaivar171: ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களால ரசிகர்களை படக்குழு திணற வைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்னொரு சூப்பர் தகவலும் வந்து இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இப்படம் போலீஸ் என்கவுண்ட்டரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: பாக்கியராஜை சும்மாவே விடக்கூடாது!… கொந்தளிக்கும் பிரபல இயக்குனர்… காரணம் தெரியுமா?..
படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளத்தில் இருந்து ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், தெலுங்கில் இருந்து ராணா டகுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜெயிலரில் மல்டி ஸ்டார் வொர்க் ஆனதால் ரஜினிகாந்த் ஐடியா தான் இது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் இயக்கும் தலைவர்171 படத்திலும் இதே டெக்னிக் பயன்படுத்தப்பட இருக்கிறதாம். அதன்படி ரன்வீர் சிங் மற்றும் ஷாருக்கானிடம் ஒரு ரோலுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறதாம். இதில் ரன்வீர் சிங் அவர் கேரக்டரை கேட்டுவிட்டு முழுகதையை கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: இப்பயாச்சும் நம்புங்கடா! 2 கோடி கொடுத்த அஜித் - வைரலாகும் புகைப்படம்! வேற வழி தெரியல ஆத்தா
இதில் ஷாருக்கான் கதையை கேட்டு பிடித்து இருந்தாலும், ரஜினிகாந்த் மீது மரியாதை இருந்தாலும் தன்னால் இந்த கதையில் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். இதற்கு காரணமாக சமீபத்தில் தொடர்ந்து கேமியோ ரோல் செய்தது காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் லோகேஷ் திரைக்கதையை எழுத தொடங்க இருக்கிறேன்.
விரைவில் முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் ஆரம்பித்துவிடுவோம் என தனது பேட்டியில் லோகேஷ் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த படத்தில் இயக்குனர் ரத்னகுமார் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் பட வேலைகளில் பிஸி எனக் கூறி கொண்டாலும் எல்லா பேசி பேச்சின் பின்விளைவு எனக் கூறப்படுகிறது.