தளபதி 66 படத்தில் ஹீரோயின் அவர்தான்!.. வாய்ப்பு கிடைச்சது இப்படித்தானாம்!....

by சிவா |
vijay
X

விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். மேலும், தோழா படத்தை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: அவருக்கா இந்த நிலமை?.. சீரியலில் நடிக்கப்போன விஜய் பட நடிகை..

இது விஜய் நடிக்கும் 66வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-01

vijay-

இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இவர் நான் ஈ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

keerthi2

அதேபோல், இப்படத்தில் ஒரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோயினாக அவர் நடிப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. விஜயை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ முடிவெடுத்தவுடன், கீர்த்தி சுரேஷைத்தான் முதலில் அழைத்து பேசியுள்ளார். அவர் மூலமாகத்தான் விஜயுடன் சந்திப்பு நடந்து, இந்த படமும் உருவானதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வட போச்சே!… பல கோடி பட்ஜெட்… ரஜினி பட வாய்ப்பை இழந்த இளம் இயக்குனர்…

ஆனாலும், இப்படத்தில் மற்றொரு ஹீரோயினும் நடிக்கவுள்ளார். அவர் ராஷ்மிகா கண்ணா அல்லது கியாரா அத்வானி இருவரின் யாரேனும் ஒருவராக இருக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளது.

Next Story