Cinema News
மாஸ்டர் படத்தில் பூனை… தளபதி 67 இல்.? மலையாளத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை தமிழ் தெரிந்து என இரு மொழி திரைப்படமாக தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்கி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், யோகி பாபு என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அவ்வப்போது லீக் ஆகி வருகிறது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது.
ஆனாலும், லோகேஷ் கனகராஜ் இது பற்றி எந்த வித உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை. தற்போது படத்தின் திரைக்கதையை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆதலால் தற்போது வெளி உலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறார். உறுதியான தகவல் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்று அவர் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதையும் படியுங்களேன் – 22 வருட பகையை தீர்த்து கொள்வாரா அஜித்.?! விக்னேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!
இந்நிலையில் அண்மையில் கேரளாவில் பிரபலமான சினிமா படங்களில் நடிக்கும் ஒரு நாய் மற்றும் அதன் உரிமையாளர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர். அப்போது அந்த நாயின் அடுத்தடுத்த படங்கள் பற்றி கேட்கப்பட்ட போது, நாய்க்கு உரிமையாளர் கூறுகையில், ‘ அடுத்ததாக விஜய் சாரின் படத்தில் இந்த நாய் நடிக்க உள்ளது. அதன் சூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.’ என்று தளபதி 67 பற்றி அறிவித்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் – அவர் இல்லை என்றலும் நான் இந்த இடத்திற்கு வந்திருப்பேன்… தளபதி விஜய் கூறிய ஷாக்கிங் தகவல்.!
மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் ஒரு பூனை இருக்கும்படி காட்சிப்படுத்தி இருப்பார் லோகேஷ் கனகராஜ். அதேபோல தளபதி 67 திரைப்படத்தின் தளபதி விஜய் உடன் இந்த நாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தவிர மற்ற அனைவரும் தளபதி 67 அப்டேட் சொல்லி வருகின்றனர்.