தளபதி-67 வெற்றிக்கூட்டணி...! தயாரிக்கப்போவது இவர்தானாம்...! வேறலெவல் அப்டேட்..
இன்னைக்கு டிரெண்டிங்கே நம்ம தளபதி விஜய் தான். படங்கள் வருதோ இல்லையோ இவரின் அடுத்தடுத்த படத்திற்கான அப்டேட்ஸ்கள் வந்து கொண்டு ரசிகர்களை வெயிலுக்கு எதாமா மழைல நனைஞ்ச மாதிரி நனையவைத்துக் கொண்டு இருக்கின்றது. தளபதி 67 படம் தாங்க இன்னைக்கு டிரெண்டு. முன்னதாக தளபதி 67 படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதா தகவல் வந்துச்சு.
ஆனா ஏற்கெனவே மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் தான் விஜயின் இந்த படத்தையும் இயக்கப் போகிறார். இவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே மாஸ்டர் என்ற ஒரு பிளாக் பஸ்டர் படத்தில் இணைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தகவல் என்னவென்றால் யார் தயாரிக்க இருப்பது என்ற கேள்வி வந்து கொண்டே இருக்க மீண்டும் மாஸ்டர் படத்தை தயாரித்த் லலித் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறாராம். இந்த செய்தி மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் அதே அனிருத் தான். ஒரு வகையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சினிமா வட்டாரம்.
மாஸ்டர் பட ரிலீஸில் கொரானா காலம் என்பதால் விஜய் அவர்கள் படத்தை ஓடிடியில் திரையிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதிற்கிணங்க தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டு லாக்டவுண் முடியும் வரை காத்திருந்து திரையில் வெளியிட்டார். அதனால் வந்த லாபத்தில் அவருக்கு நஷ்டம் கூட ஏற்பட்டது. அதை ஈடுகட்ட கூட இந்த தயாரிப்பாளரை அணுகியிருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. ஆக மொத்தம் விஜய்யை வைத்து பெருசா பண்ணப்போறாங்கனு தெரியுது.