தளபதி 68 பூஜையே போடல!.. அதுக்குள்ள இத்தனை கோடிக்கு போனியாகிடுச்சா!.. ஆனால், விஜய் காரணம் இல்லையாம்!..
லியோ படத்தின் பேட்ச் வொர்க்கே இன்னமும் முடியாத நிலையில், தளபதி 68 படத்தின் பிசினஸ் ஆரம்பமாகி விட்டதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளன. ஒரு பக்கம் ஜெயிலர் படத்துக்கு டிக்கெட் புக்கிங் தீயாக நடைபெற்று இருப்பதை வைத்து ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை ஓட்டி வரும் நிலையில், தளபதி 68 படத்துக்கு பூஜை போடாமலே வசூல் வேட்டை தொடங்கி விட்டதாக விஜய் ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர்.
லியோ படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் 400 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறார் என பில்டப்புகள் பரவின. ஆனால், அந்த படம் ஆரம்பிக்காத நிலையில், நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தளபதி 68 ஆடியோ ரைட்ஸ்:
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிகர் ஜெய்யும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் பூஜை முன்னதாக போட திட்டம் போட்ட நிலையில், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் முட்டுக்கட்டை போட்டு விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வெங்கட் பிரபு மற்றும் யுவன் காம்போ கன்ஃபார்ம் ஆன நிலையில், படத்தின் ஆடியோ உரிமம் லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை விட அதிகமாக விற்பனையாகி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 24 கோடி ரூபாய்க்கு தளபதி 68 படத்தின் ஆடியோ உரிமம் விற்பனையாகி உள்ளதாக கூறுகின்றனர்.
விஜய் காரணம் இல்லையா?:
ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இது நடிகர் விஜய்க்கான பிசினஸ் ஆக இல்லாமல் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் கூட்டணி என்பதாலே இத்தனை பெரிய தொகைக்கு விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
எப்படியிருந்தாலும் நடிகர் விஜய்யின் படம் என்பதால் இப்படியொரு பிசினஸ் அரங்கேறியிருப்பதாகவும், லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தெறிக்கும் என்பதால் தான் தளபதி 68 படத்துக்கு இப்போதே கர்ச்சிப்பை விரித்து விட்டனர் என்றும் கூறுகின்றனர்.