’தளபதி68’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா..? அடங்கம்மா..! இப்படியா எல்லாம் இறங்குவீங்க!..
Thalapathy68: விஜய் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் தளபதி68 படத்தின் நிறைய அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் வெளியாகி இருக்கும் அடுத்த அப்டேட்டால் ரசிகர்களே அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகியும் இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் தளபதி68. இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இப்படம் டைம் ட்ராவல் படமாக அமைய இருக்கிறது.
இதையும் வாசிங்க:ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..
அப்பா, மகன் என இரு வேடத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற படக்குழு டீஏஜிங் முறையில் விஜயிற்கு நிறைய விஎஃப்எக்ஸ் வேலைகள் நடந்தது. இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா, மைக் மோகன் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி என நடிகைகளின் லிஸ்ட்டும் எக்கசக்கம். இதனை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் சண்டை காட்சிகளின் ஷூட்டிங் நடந்ததாக கூட அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார்.
இதையும் வாசிங்க:ஷாட் ரெடின்னதும் மனுஷன் இத கூடவா மறப்பாரு?.. ஐய்யய்யோ நம்பியாரோட மானம் போயிடுச்சே!.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பின் ஷெட்யூல் முடிந்து படக்குழு சென்னை திரும்பி இருக்கின்றனர். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் காப்பி தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
2012ம் ஆண்டு வெளிவந்த லூப்பர் படத்தின் கதையை போல தான் தளபதி68 படத்தின் கதையும் இருக்கும் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. உங்கள் எதிர்காலத்தால் வேட்டையாடப்பட்டும், உங்க இறந்தகாலத்தால் பயப்பட வைப்பதும் என்ற டேக்லைனை கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.