தளபதி 68 படத்தின் பேர் என்ன தெரியுமா? புது ட்ரீட் காத்திருக்கு!..

வாரிசு படத்திற்கு பிறகு வரிசையாக படங்களாக நடித்து வருகிறார் விஜய். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து விஜய் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

vijay
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. அதற்கு பிறகு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கினாலே அந்த படம் வெற்றிதான் என்கிற நிலை இருந்து வருகிறது.
படத்தின் பெயர் இதுதானாம்:
இந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து ஒரு படம் நடிக்க விருக்கிறார். வெங்கட் பிரபு என்பதால் இது ஜாலியான படமாகதான் இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தில் தல தோனிக்கு காட்சிகள் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு சி.எஸ்.கே என பெயர் வைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. வெங்கட் பிரபு அப்படி பெயர் வைக்க கூடியவர்தான் என்று பேச்சுக்கள் மக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.