என்னங்க புதுசு புதுசா பண்ணுறீங்க..தளபதி68 படப்பிடிப்பில் இப்படி செஞ்சிட்டீங்களே வெங்கட் பிரபு..!
Thalapathy68: நடிகர் விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பில் முக்கிய விஷயம் நடந்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் தட்டி இருக்கிறார். தற்போது இந்த ட்வீட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி68. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபு தேவா உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கமல் ஐயா! இன்னும் என்னெல்லாம் கைவசம் வச்சிருக்கீங்க? அதிர வைத்த ‘இந்தியன் 2’
இப்படம் டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸில் மெடிக்கல் டெஸ்டும், விஎஃப்எக்ஸ் பணிகளும் முதற்கட்டமாக நடந்தது. இதையடுத்து இப்படத்தின் பாடல் ஷூட்டிங் நடந்து முடிந்தது.
படத்தின் கதை மீது அதீத எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. வில்லன்களாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் மைக் மோகன் ஆகியோர் களமிறங்கி இருக்கின்றனர். கிட்டத்தட்ட படத்தில் ஏகப்பட்ட கோலிவுட் பிரபலங்கள் இருப்பதால் படத்திற்காக ரசிகர்கள் தற்போதே வெயிட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:டவுசர் கூட போட மாட்ட! நீதான் பிரதீப்புக்கு ரெட்கார்டு கொடுப்பியா?!.. வீடியோ ஆதாரத்தோடு கலாய்க்கும் நெட்டிசன்கள்..
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கும் அர்ச்சனா கல்பாத்தி, இங்கு நிறைய ஷூட் ப்ளான் செய்து இருக்கிறோம். நேற்று இரவு வரை ஆக்ஷன் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கி இருக்கிறார். அதனால் அவர் விடுமுறை என ட்வீட் செய்து இருக்கிறார்.
இதையடுத்து இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் லியோ படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் தாய்லாந்துக்கு திரும்பினார். இதையடுத்து அவரை வைத்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனா ட்வீட்: https://twitter.com/archanakalpathi/status/1721741313161429018