Categories: Cinema News latest news

இவன் மட்டும் வேணாம்! அவனும் வேணும்… அடம் பிடிக்கும் தளபதி! கோலிவுட்டின் புதுக்கதை!

விஜயின் லியோ படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருப்பதால் தற்போது விஜயின் அடுத்தப்படத்தின் வேலைகளுக்கான பணிகள் குறித்த அப்டேட்களும் அடிக்கடி வெளியில் தொடர்ந்து கசிந்து வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் நாயகிகள் குறித்த அப்டேட்கள் வெளியானது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கலாம். அவருக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் என இரு நாயகிகள் படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கின்றனர். பெயர் கூட வைக்காத இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் வெங்கட் பிரபு தன்னுடைய குழுவுடன் பிஸியாக வேலை செய்து வருகிறார்.

இதையும் படிங்க : ஊருக்கு மட்டும் தான் உபதேசமா.. ஜெயிலர்ல ரஜினி பண்ணது ரொம்ப தப்பு- கட் அண்ட் ரைட்டா சொன்ன தயாரிப்பாளர்..

அடியே படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக வெங்கட் பிரபு நடித்திருக்கிறார். அப்படத்தில் விஜயினை இயக்கிவிட்டது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த டீசர் ரிலீஸுக்கு பிறகே விஜயை இயக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக சமீபத்தில் வெங்கட் பிரபு தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் மிக விரைவில் தளபதி68ன் வேலைகளும் தொடங்க இருக்கிறது.

தொடர்ந்து, பல வருடங்களுக்கு பிறகு விஜயின் படத்திற்கு யுவன் இசையமைக்க இருக்கிறார். ஆனால், அவருடன் தமனையும் இசையமைக்க விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து இருக்கிறது. அதாவது, வாரிசு படத்தின் கதையை விட பாடல்கள் தான் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதற்கு காரணம் தமன் தான் என்பதாலே இந்த முடிவாம்.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆரால் பிரபலமாகி அவருடனே நடிக்க மறுத்த நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..

சமீபத்தில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமனிடம் தொகுப்பாளினி பிரியங்கா அவரின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்து கேள்வி எழுப்புகிறார். நானும், யுவனும் சேர்ந்து ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் வேலை செய்ய இருக்கிறோம் என்றார் தமன். உடனே பிரியங்கா யோசிக்காமல் தளபதி68ஆ எனக் கேட்டு விடுகிறார். இதற்கு தமன் நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும் மழுப்பியதில் இருந்தே அது இந்த ப்ராஜெக்ட் தான் என்று இணையத்தில் கிசுகிசுக்கள் எழுந்து விட்டது.

இது தமிழ் சினிமாவிற்கு புதிய விஷயமில்லை தான். இதற்கு முன்பே முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து பணிபுரிந்து இருக்கின்றனர். ஒருவர் மியூசிக் அமைத்தால் ஒரு பின்னணி அமைப்பார்கள். இதைப்போல தான் மெல்ல திறந்தது கதவு படத்தில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுடன், இளையராஜா இணைந்து பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Akhilan