தள்ளிப்போகும் தளபதி 68 ஷூட்டிங்!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!.. அட போங்கப்பா!..

by சிவா |
vijay
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். இளைய தளபதியாக மாறி இப்போது தளபதியாக மாறிவிட்டார். இவரின் படங்கள் நல்ல வசூலை பெற்று வருவதால் இவர் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள்.

ரஜினி, கமல், அஜித் போல ஒரு படம் முடிந்ததும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் ஒரு சில மாதங்களிலேயே தனது அடுத்த படத்திற்கு தயாராகி விடுகிறார். வாரிசு படம் வெளியான உடனேயே லியோ படத்தில் நடிக்க துவங்கினார். இப்போது லியோ பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: கோட்டை விட்ட இறைவன்!.. தட்டித் தூக்கிய வேட்டையன்!.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் இது. ஏற்கனவே லியோ இசை வெளியீட்டு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது நடக்காது என தயாரிப்பாளர் அறிவித்து விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.

எனவே, அவர்களை குஷிப்படுத்த லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை நேற்று மாலை வெளியிட்டார்கள். இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார். ஒருபக்கம் விஜய் தனது 68வது படத்திற்கு ரெடியாகி வருகிறார். வெங்கட்பிரபு இயக்கவுள்ள இந்த படத்தின் பூஜை வருகிற அக்டோபர் 2ம் தேதி நடக்கவுள்ளது.

இதையும் படிங்க: சைலன்ட்டா சித்து வேலை காட்ட பார்த்த சித்தார்த்!.. சும்மா வசமா இப்படி சிக்கிட்டாரேப்பா!.. என்ன ஆச்சு?..

பொதுவாக பூஜை முடிந்த பின் சில காட்சிகளை எடுப்பார்கள். அதேபோல், அன்று ஒரு பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், அன்று காந்தி ஜெயந்தி என்பதால் தொழிலாளர்களுக்கு 3 நாள் சம்பளம் கொடுக்க வேண்டும். முதல் நாளே எதற்கு இவ்வளவு செலவு என யோசித்த படக்குழு அடுத்தநாள் அதாவது அக்டோபர் 3ம் தேதி பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இதிலிருந்து தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும், சினேகா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..

Next Story