Thalapathy 69: இதென்னடா அண்ணனுக்கு வந்த சோதனை... கால்ஷீட் கேட்டாலே தெறிச்சு ஓடுறாங்க?

by சிவா |
thalapathy 69
X

#image_title

Thalapathy 69: அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பதால் தன்னுடைய கடைசி படமாக தளபதி 69 இருக்கும் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இதனால் அவரின் கடைசி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஒரு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, மற்றொரு நாயகியாக சமந்தாவை நடிக்க வைத்திட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். முன்னதாக ஹெச்.வினோத் சொன்ன கதை தனக்கு பிடித்து இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: உனக்கு 200 ரூபா பெருசுன்னா ஏன் FDFS போற?!.. ரசிகர்களை திட்டும் விஜய் பட இயக்குனர்!…

ஆனால் தற்போது வினோத் படத்தில் முக்கிய வேடம் அளித்ததாகவும், தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் சிவராஜ்குமார் தெரிவித்து இருக்கிறார். இதனால் அந்த வேடத்தில் நடித்திட கவுதம் வாசுதேவ மேனனை படக்குழு அப்ரோச் செய்து இருக்கிறதாம். லியோ படத்தில் கவுதம் வாசுதேவ மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதனால் அவர் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என ஹெச்.வினோத் நம்புகிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய வேடத்தில் நடித்திட சத்யராஜை அணுகியபோது இப்படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டார். தலைவா படத்தில் பட்டதே போதும் என நினைத்து விட்டார் போல. தற்போது சிவராஜ்குமாரும் இந்த லிஸ்டில் இணைந்து விட்டார். அரசியல் படம் என்பதால் சத்யராஜை நடிக்க மறுத்ததாக தெரிகிறது.

#image_title

சிவராஜ்குமாரை பொறுத்தவரை அவருக்கு உடல்நிலை பிரச்சினை இருக்கிறது. இதற்காக விரைவில் அமெரிக்காவிற்கு சிகிச்சை எடுக்க செல்கிறார். படத்தில் மற்றொரு நாயகியாக நடித்திட நயன்தாராவை கேட்டதற்கு அவர் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி நடிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பஞ்ச்கள் அதிகமாக இருக்கும் என்பதால் அனைவரும் ஆளுங்கட்சியை பகைத்திட மனமின்றி தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி படத்தில் நடிக்க மறுத்து வருவதாக தெரிகிறது.

இப்படி எல்லாரும் தெறிச்சு ஓடுனா அண்ணன் என்ன பண்ணுவாரு?

Next Story