ஏரியுற தீயில் எண்ணெய் இல்ல.. பெட்ரோலே ஊத்திட்டாங்க தளபதி 69 டீம்.. என்ன விஷயம் தெரியுமா?

Published on: August 17, 2024
vijay
---Advertisement---

Thalapathy 69: தளபதி 69 படம் வருமா வராதா என்ற ஒரு சந்தேகம் விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் சமீபத்திய ஒரு விழாவில் அதற்கான பதிலை எச். வினோத் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒரு விழாவில் கலந்து கொண்ட எச் வினோத்திடம் பத்திரிக்கை நிருபர்கள் தளபதி 69 படம் எப்படிப்பட்ட ஒரு அரசியல் படம் என்ற வகையில் கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த வினோத் தளபதி 69 படத்தை பொருத்தவரைக்கும் அனைத்து ரசிகர்களும் பார்க்கும் படமாக அமைய வேண்டும் என விஜய் சொல்லி இருக்கிறார் என்றும் தனிப்பட்ட அரசியல் என அதில் இருக்காது என்றும் கூறியதாக எச் வினோத் பதிலளித்திருந்தார். இந்த ஒரு பதில் மூலமாகவே கண்டிப்பாக தளபதி 69 திரைப்படம் வெளியாகும் என உறுதியாகிவிட்டது.

இதையும் படிங்க: வேறலெவல் வெறித்தனம்!. சும்மா சரவெடி!. தெறிக்க விடும் கோட் டிரெய்லர் வீடியோ!..

அதற்கு ஏற்ற வகையில் தளபதி 69 திரைப்படம் அக்டோபர் மாதம் 4ம் தேதி அதன் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்களாம். இதற்கு மத்தியில் எந்த ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பையும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கக் கூடாது என்றும் ஏற்கனவே ஆரம்பித்த படங்களின் படப்பிடிப்பை அக்டோபர் 16ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.

அதன் பிறகு ஸ்டிரைக்கை அறிவிக்க போவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தளபதி 69 திரைப்படத்தின் படப்பிடிப்பே அக்டோபர் நான்காம் தேதி தான் ஆரம்பிக்க இருக்கிறார்கள். இது எந்த வகையில் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என தெரியவில்லை. இன்னொரு பக்கம் ஸ்டிரைக் இருக்காது என்றும் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: தங்கலான் தங்கம் எடுத்துச்சானு தெரியல! பா.ரஞ்சித் தட்ட தூக்காம இருந்தா சரி

அதற்குக் காரணம் ஸ்டிரைக் ஆரம்பிப்பதற்குள் தனுஷ் மற்றும் விஷால் போன்ற நடிகர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றும் ஸ்ட்ரைக் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் அவர்களை தவிர இன்னும் எத்தனையோ பிரச்சனைகள் இன்னும் இருப்பதாக சொல்ல அதனால் கண்டிப்பாக ஸ்ட்ரைக் இருக்கும் என தெரிகிறது.

எந்த ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பிக்க கூடாது என சொல்லிய நிலையில் விஜயின் இந்த படத்தை வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி ஆரம்பிக்கும் நிலையில் இது பற்றி வேறு என்ன பிரச்சனை வரப்போகிறது என தெரியவில்லை.

இதையும் படிங்க: மாஸ்டர் சாதனையை முறியடிக்குமா கோட்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.