More
Categories: Cinema News latest news

என்ன தளபதி போன் பேசுறாரா.?! நக்கல் செய்த அஜித்.!

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருக்குமே , அவர் பட இயக்குனர் என்றால் இவர் படத்தை இயக்க முடியாது. அதுவே இவர் பட இயக்குனர் என்றால் அவருடைய படத்தை இயக்க முடியாது. இது தொடர்கதையாக நடந்து வருகிறது.

Advertising
Advertising

அதனை விக்ரமன், எஸ்.ஜே. சூர்யா, கே.எஸ். ரவிக்குமார் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே குறைத்துள்ளனர். இவர்கள் இருவரது படங்களையும் இயக்கியுள்ளனர். ஆனால், அதுவும் அவர்கள் இருவரும் வளர்ந்து வந்த நேரத்தில் தான் , அதற்குப் பிறகு அதுவும் கிடையாது.

ஆனால், தற்போது ஒரு தகவல் வெளியாகி இருந்தது என்னவென்றால் சிறுத்தை சிவா வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிறகு தளபதி விஜய்க்கு ஒரு கதை கூறி இருந்தாராம். அந்த கதையில் விஜய் நடிப்பது போல இருந்ததாம்.

அந்த சமயம் விஜய், சிறுத்தை சிவாவுக்கு போன் செய்து கேட்பாராம். இதனை சூட்டிங் ஸ்பாட்டில் கவனித்த அஜித் போனில் தளபதி விஜய்-ஆ என்று கேட்பாராம். ஆனால், ஏனோ சில காரணங்களால் சிறுத்தை சிவா- விஜய் கூட்டணி நடைபெறாமல் போனது.

இதையும் படியுங்களேன் – நன்றி மறந்து பேசாதீங்க.! பீஸ்ட் நஷ்டம்.! தியேட்டர் அதிபர் கொந்தளிப்பு.!

இதேபோல , வினோத் முதலில் விஜய்யிடம் கதை கூறி அதன் பின்னர் அஜித்திற்கு கதை சொல்லி ஓகே வாங்கியதாக சில தகவல்கள் அண்மையில் வெளியாகின.

ஆனாலும், அண்மைக்காலமாக விஜய் பட இயக்குனர் அஜித் படத்தை இயக்கியது இல்லை. அதே போல அஜித் பட இயக்குனர் விஜய் படத்தை இயக்கியது இல்லை. இது தற்போது தொடர்ந்து கிடைத்து வரும் காலங்களில் அதில் மாற்றம் ஏதும் இருக்கிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Published by
Manikandan

Recent Posts