Connect with us

Cinema News

நன்றி மறந்து பேசாதீங்க.! பீஸ்ட் நஷ்டம்.! தியேட்டர் அதிபர் கொந்தளிப்பு.!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பெரிய வெற்றியை பெறவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இப்படத்தின் டிரைலரில் காண்பிக்கப்பட்ட போது போல முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகவும் அமையாமல், காமெடி படமாகவும் அமையாமல் திரைக்கதையில் திணறி இருந்தது.

ஆயினும், விஜய் படம் எப்படியும் குடும்பங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். ஆதலால் இந்த நான்கு நாள் விடுமுறையை விஜய் படம் பார்த்து பலரும் மகிழ்ந்து வருகின்றனர். அதனால் தியேட்டர் வசூல் இன்னும் குறையவில்லை. இருந்தாலும் சில திரையரங்குகள் இந்த திரைப்படம் சரியான வெற்றியை பெறவில்லை என புலம்பி வருகின்றனர். மேலும் சிலர் இணையத்தில் இப்படம் நஷ்டமாகி விட்டது போல கணக்கு காட்டி வந்தனர்.

இதனை கவனித்த ஒரு சினிமா விநியோகிஸ்தர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். விஜய் படத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்கள் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன. அதனால் நஷ்டம் என்ற பேச்சுக்கே பீஸ்ட் திரைப்படத்தில் இடம் இல்லை.

beast

கொரோனா காலகட்டத்தில் பெரிய ஹீரோ படங்கள் OTTயில் வெளியான தருணத்தில் திரையரங்குகளுக்காக காத்திருந்து தளபதி விஜய் ‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட்டார். அந்த திரைப்படமும் ரசிகர்களுக்க, விமர்சகர்களுக்கு, தியேட்டர் அதிபர்களுக்கு என அனைவரையும் மகிழ்வித்தது. அந்த நன்றிகளை மறந்துவிட்டு பீஸ்ட் படம் தோல்வி என கூறக்கூடாது.

இதையும் படியுங்களேன் – தெரியாத்தனமா சினிமாவுக்குள்ள வந்துட்டேன்.! திட்டமிட்டு ஏதும் செய்யல.! உருகுலைந்த விஜய் சேதுபதி.!

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் சில படங்கள் தோல்வி படங்களாக அமைய தான் செய்யும். அவர்கள் எதிர்பார்த்த வெற்றி சில சமயம் கிடைக்காததுதான். அதனால் அந்த ஹீரோக்களை நாம் ஒதுக்கிவிட முடியாது. அது போல தான் பீஸ்ட் திரைப்படமும் என்ற நிதர்சனமான உண்மையை தெளிவாக பகிர்ந்துகொண்டார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top