கத்தி படத்தில் இந்த விஷயத்தை தொடர்ந்து செய்த தளபதி விஜய்... கொஞ்சம் கூட மிஸ் ஆகல...

by Manikandan |   ( Updated:2022-07-25 08:47:48  )
கத்தி படத்தில் இந்த விஷயத்தை தொடர்ந்து செய்த தளபதி விஜய்... கொஞ்சம் கூட மிஸ் ஆகல...
X

பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் கலக்கி வரும் இவர் 'துப்பாக்கி' திரைப்படத்தை இயக்கினார். துப்பாக்கியை விட கத்தி படம் மாபெரும் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

கத்தி படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகர் விஜய். அதில் ஒரு கதாப்பாத்திரமான ஜீவானந்தம் என்ற கதாபாத்திரம் அவருக்கு ஒரு வித்தியாசமான கேரக்டராக அமைந்தது. ஆனால், படத்தில் ஜீவானந்தம் கேரட்டரில் நடித்த விஜய்யை நீங்கள் உற்று கவனித்தது உண்டா.?

அதாவது, இந்த படத்தில் சில முக்கிய காட்சிகளில், அவரது இரண்டும் கண்களையும் அடிக்கடி சிமிட்டிக்கொண்டே இருப்பார். இதனை கவனித்த சிலர், சமூக வலைதளத்தில் கண்களையும் சிமிட்டும் நோயால் பாதிக்கப்பட்ட நபராக நடித்துள்ளதை சுட்டி காட்டியுள்ளனர்.

இதையும் படிங்களேன் - வேற வழி இல்ல.. இத சொல்லி தான் ஆகணும்.! தனுஷின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே…

அந்த வகையில், இதனை தெளிவாக எடுத்துரைக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படம் வெளியானதும். மாஸ்டர் கூட்டணியான இயக்குனர் லோகேஷுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story