தளபதியை சந்தித்த தளபதி.! அப்போ அது கண்டிப்பா நடக்குமா.?!

Published on: April 6, 2022
---Advertisement---

தளபதி விஜயை வைத்து பிகில் எனும் பெரிய ஹிட் படத்தை தயாரித்த நிறுவனம் தான் கல்பாத்திஎஸ்.அகோரம் குடும்பத்தாரின் ஏ.ஜி.எஸ் பட நிறுவனம். அதில் கல்பாத்தி அகோரம் அவர்களின் மகளுக்கு நேற்று ப்ரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் பிரபல தொழிலதிபர் மகன் ராகுல் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. அதற்கு பலரை கல்பாத்தி அகோரம் அழைத்திருந்தார். அதில், தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களையும் அழைத்திருந்தார். அதே போல், நடிகர் தளபதி விஜய் அவர்களையும் அழைத்திருந்தனர்.

எதிர்பாராத விதமாக நடந்ததா அல்லது எதிர்பார்த்து நடந்ததா என தெரியவில்லை, அரசியல் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலக தளபதி விஜய் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் மணமக்களை வாழ்த்த வந்துவிட்டனர்.

இதையும் படியுங்களேன் – நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்.! இதுதான் அஜித்தின் கெட்ட பழக்கமாம்.!

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்து கொண்டு, தங்கள் மரியாதையை வணக்கத்தின் மூலம் பகிர்ந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தளபதியை சந்தித்த தளபதி என இணையவாசிகள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

 

விஜய் தற்போது சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடித்து வருகிறார். தற்போது கல்பாத்தி அகோரம் வீட்டு திருமணத்திற்கு விஜய் வந்துள்ளதால், மீண்டும் பிகில் கூட்டணி இணைய வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment