Cinema News
செப்டம்பரில் மாநாடு!. 10 லட்சம் பேர் டார்கெட்!.. தளபதி விஜய் போடும் பக்கா ஸ்கெட்ச்!..
விஜய்க்கு அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் எப்போதோ வந்துவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்தார். ‘தலைவா’ பட போஸ்டரில் ‘Time To Lead’ என்கிற வாசகம் இடம் பெற்ற போதே அவருக்கு அரசியல் கட்சிகள் மூலம் பிரச்சனைகள் வர துவங்கியது. இதனால், தலைவா படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் 2 நாட்கள் தள்ளிப்போனது. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புலி படத்தில் விஜய் நடித்து கொண்டிருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர், விஜயின் அலுவலகம் ஆகிவற்றில் வருமான வரி சோதனை நடந்தது. சர்கார் படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்திற்காக ஒரு கட்சியினர் சென்னையில் அப்படம் வெளியான தியேட்டரில் போஸ்டர் மற்றும் பேனர்களை அடித்து நொறுக்கினர்.
இதையும் படிங்க: மோகன்லால் பலமுறை சொல்லியும் கேட்காத விஜய்!.. கோபத்தில் பேசாமல் போன நடிகர்!..
மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்திற்காக ஒரு தேசிய கட்சி விஜயை கடுமையாக விமர்சனம் செய்தது. மாஸ்டர் படம் உருவானபோது நெய்வேலியில் நடித்து கொண்டிருந்த விஜயை வருமான வரித்துறையின் காரில் சென்னை கூட்டி வந்து விசாரணை நடத்தினார்கள். இது எல்லாவற்றாலும் ஏற்பட்ட கோபத்தில்தான் விஜய் அரசியலுக்கு வருவது என முடிவெடுத்தார் என சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என சொல்லிவிட்டார். இப்போது கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் முதல் வாரம் துவங்கவுள்ளது.
இந்நிலையில், கோட் படம் வெளியான பின் செப்டம்பர் 21ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாநாடு நடந்த அதே இடத்தில்தான் இந்த மாநாடும் நடக்கவுள்ளது. இதில், விஜய் ரசிகர்கள் 10 லட்சம் பேரை களமிறக்கும் வேலையை இப்போதே துவங்கிவிட்டார்களாம்.