ஒரு போட்டோவுல சிக்கிடீங்களே.! தளபதி66இல் இணைந்துள்ள சூப்பர் பிரபலம்.!

Published on: April 6, 2022
---Advertisement---

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் புதன் கிழமை வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை வரவேற்க உலகமெங்கும் விஜய் ரசிகர்கள் ஏகபோகமாக காத்திருக்கின்றனர். முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை அடுத்து விஜய் , தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் விஜயின் 66வது திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜா இன்று நடைபெற்றது.

இதில் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , நாயகி ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மற்றும் டெக்கினிஷியன்களோடு நடிகர் சரத்குமாரும் சேர்ந்துள்ளார். விஜய் சரத்குமார் இணைந்து நடிப்பது நமக்கு தெரிந்து இதுவே முதல் முறை.

இதற்கு முன்னர் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் தான் விஜய் நடித்த சர்கார் படத்தில் வில்லியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார் இந்த படத்தில் ரஷ்மிகாவுக்கு அப்பா வேடத்தில் நடிக்கிறாரா அல்லது விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாரா என தெரியவில்லை. இப்படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

vijay

இதையும் படியுங்களேன் – எம்,ஜி.ஆருக்கே அந்த விஷயம் ரெம்ப வருஷம் கழித்து தான் தெரியும்.! ரகசியம் கூறிய மருத்துவர்.!

எந்த முன்னறிவிப்பும் இல்லாத நேரத்தில் திடீரென பட பூஜையில் கலந்துகொண்டு தானும் இருக்கிறேன் என உறுதிப்படுத்தியுள்ளார் சரத்குமார். இவர் எந்த வேடத்தில் நடிக்க உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். விரைவில் அதற்கான அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment