தளபதி68 இந்த படத்தின் காப்பியா.. இது விஜயிற்கே முதல்முறை தானாம்… ஆச்சரிய தகவல்..
Thalapathy68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பெயர் என்னவென்று ரசிகர்கள் சுவாரஸ்யமாக எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலையில், தற்போது சில முக்கிய தகவல்கள் இணையத்தில் லீக்காகி இருக்கிறது. அதிலும் படத்தின் கதை குறித்து முக்கிய அப்டேட் கூட வெளியாகி உள்ளது.
லியோ படத்தின் நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் கூட படம் மிகப்பெரிய வசூல் செய்தது. இதைதொடர்ந்து விஜயின் அடுத்த இயக்குனராக அறிவிக்கப்பட்டார் வெங்கட்பிரபு. ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான மாநாடு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…
அந்த நம்பிக்கையில் அவர் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முதல் சம்பவமாக விஜயை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கூட்டிக்கொண்டு சென்று டி ஏஜிங் பணிக்காக அவருக்கு சில டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதற்கு விஎஃப்எக்ஸ் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறதாம்.
இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமாக எஸ்.ஜே.சூர்யா, மைக் மோகன் ஆகிய இருவர் தான் வில்லன் வேடம் ஏற்று இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்த ஸ்டார் கூட்டத்துக்கே பலவகையான எதிர்பார்ப்பு உருவாகியது. இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்க: ரவீனாவின் அம்மா வராததற்கு காரணம் இதுதானா? உள்ளே வந்த ஆண்டி – டோட்டல் டேமேஜ் ஆன மணி