அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!...
விஜய் தற்போது வெங்கட் பிரபுவிடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கூட்டணி உருவாக பல வருடம் முன்னரே விதை போட்டவர் அஜித் தானாம். அவர் அப்போது சொன்ன வாக்கு இப்போது பழித்து இருக்கிறது. அப்படி என்ன நடந்தது என்ற சுவாரஸ்ய தகவலை வெளியிட்டு இருக்கிறார் மோகன் ராஜா.
விஜயின் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய வேலாயுதம் படம் உருவான சமயத்தில் தான் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் மங்காத்தா படம் உருவாகி இருந்தது. அந்த சமயத்தில் இரு படங்களுக்குமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உருவாகியது.
இதையும் படிங்க : பட்ட கடனை அடைக்க போராடும் தனுஷ்! முத்திரை பதிச்சாலும் மனுஷனுக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதையா?
விஜயும், அஜித்தும் ஷூட்டிங் சமயத்தில் சந்தித்து கொண்டனர். அஜித்துக்கு விஜய் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதை அணிந்து கொண்டு அஜித் மங்காத்தாவில் நடித்த காட்சிகள் எல்லாம் செம ஹிட் கொடுத்தது. இரு தரப்பு ரசிகர்களுமே இதை கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் மங்காத்தா படம் மிகப்பெரிய அளவில் ஹிட் படமாக அமைந்தது. வேலாயுதம் வசூலில் சுமார் தான் என்றாலும் விமர்சன ரீதியாக ஓகே லெவலில் தான் இருந்தது. ஆனால் அஜித்தும், விஜயும் இந்த படங்களின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற போது ஒரே விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது இருவரும் பேசிக்கொண்டு இருந்தனராம்.
இதையும் படிங்க : விஜயிடம் கண்ணீர் விட்ட மகள்!… இந்த படத்திற்கா இவ்வளவு பில்டப்பு?!… வசூல் வாய பொழந்த கதையால இருக்கு!
கடைசியில் அஜித்தின் வாக்குப்படியே தற்போது தளபதி68 படம் நடக்க இருக்கிறது. தினமும் இப்படத்தின் அப்டேட்களை வெங்கட் ட்விட்டரில் வாரி இறைத்து வரிகிறார். ஒரு கட்டத்தில் அப்டேட்டுக்கே லீவ் விட்ட கதையெல்லாம் நடப்பது தான் சுவாரஸ்யமே!