Categories: Cinema News latest news

தளபதி 68 படத்தில் இந்த பாப்புலர் ஜோடியுமா? பாட்டுக்கு கூட ஒரு இக்கு வைத்திருக்கும் வெங்கட் பிரபு…

Thalapathy68: விஜய் தன்னுடைய லியோ எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தன்னுடைய அடுத்த பட வேலைகளிலும் இறங்கி விட்டார். அதன்படி இன்று தளபதி68 படத்தின் பூஜை நடந்து முடிந்து இருக்கிறது. அங்கு எடுத்து கொண்ட சில படங்களை பிரபலங்கள் மட்டுமே வெளியிட்டு இருக்கின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் தளபதி68. இன்னும் பெயர் வைக்காத இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்தின் இசையமைப்பு வேலைகளை செய்ய இருக்கிறார்.

இதையும் படிங்க: அடேய் இதுக்கு தானா அது… இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 போட்டியாளர்கள்…

சமீபகாலமாக சயின்ஸ் பிக்ஸன் கதைகளில் ஆர்வம் கொண்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. அதனால் இந்த படமும் டைம் ட்ராவல் படமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஎஃப்எக்ஸ் காட்சிகளை பெரிய தொழில்நுட்பத்தில் எடுக்க படக்குழுவுடன் விஜய் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார்.

அங்கு அவருக்கு பிரத்யேக டெஸ்ட் எடுத்தனர். விஜய் இரண்டு வேடத்தில் நடிப்பதால் ஒரு வேடத்துக்கும், இன்னொரு வேடத்துக்கும் பெரிய மாற்றங்களை காட்ட வேண்டும் என்ற ஐடியாவில் இருக்கிறாராம் வெங்கட் பிரபு.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடந்து இருக்கிறது. அதில், பிரபுதேவா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே பிரியங்கா மோகன் தூக்கப்பட்டு விட்டார் என்ற தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் அவர் இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.

இதையும் படிங்க: பிக்பாஸில் இரண்டாகும் வீடு… கடுப்பில் 6 போட்டியாளர்கள்… தெறிக்கவிடும் ப்ரோமோ.. ஆரம்பமே அதிரடி!

Published by
Akhilan