Thalapathy68: தளபதி68 படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து திரும்பிய நிலையில் விஜய் மட்டும் திரும்பவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எங்கு சென்றார் எப்போது வருவார் என பலரும் மண்டையை பிய்த்து கொண்டு தேடி வருகின்றனர்.
தளபதி நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படம் ரிலீஸுக்கு நெருங்கிவிட்டது. அதனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி68 படத்தின் அப்டேட் தான் தற்போது இணையத்தில் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்காமல் இருக்கும் நிலையில் தளபதி68 என அழைத்து வருகின்றனர். இப்படத்தினை கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து தமனும் இசையமைக்க இருக்கின்றனர்.
இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!
அப்பா மற்றும் மகன் வேடங்களில் விஜய் நடிக்க, மகனுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். அப்பா விஜயின் ஜோடிக்கு நடிகை தேடல் தீவிரமாக நடந்து வருகிறது. ஜோதிகா, சிம்ரன் என வந்த வாய்ப்பை தட்டிவிட சினேகா அந்த வாய்ப்பினை தட்ட இருக்கிறார்.
சமீபத்தில் இந்த படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது. இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கும் எனப் பேச்சுகள் எழுந்தது. அதனால் அதிகபட்ச டெக்னாலஜி விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்தது. இதனால் இப்படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் படத்தின் வேலைகளை முடித்துக்கொண்டு படக்குழு தற்போது சென்னை திரும்பி இருக்கின்றனர். இதை வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டரில் விமான நிலையத்தில் சூர்யாவை பார்த்ததாக தெரிவித்து இருந்தார். ஆனால் விஜய் மட்டும் தற்போது வரை சென்னை வரவில்லையாம்.
இதையும் படிங்க: ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் இறங்கி செய்த வேலை!… என்னய்யா அம்புட்டு பாசமா?..
அவர் இந்த வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய ஹாலிடே ட்ரிப்பை நார்வேயில் கொண்டாட சென்றுவிட்டாராம். லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சமயத்தில் சென்னை திரும்பி தளபதி68 படப்பிடிப்பில் கலந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…