இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…

Published on: December 23, 2023
---Advertisement---

Thalapathy68: பலகட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி68 படத்தின் கதை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும், அந்த டைட்டில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. இப்படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க: குருவிடமே சீன் போட்ட ரஜினிகாந்த்.. ஆனா இந்த பிரபலத்துக்கு மட்டும் இதை செய்தாராம்..!

இப்படத்தில் விஜயுடன், பிரபுதேவா, லைலா, சினேகா, பிரசாந்த், எஸ்.ஜே.சூர்யா, மைக் மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடத்தில் நடிக்கிறார். இப்படம் வில் ஸ்மித்தில் நடிப்பில் வெளியாகி இருந்த ஜெமினி மேன் திரைப்படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இதில் ஒரு வேடத்தில் வயதான ஒரு வேடத்திலும், க்ளோனிங் மகன் என்ற ஒரு வேடமும் இருக்கிறதாம். அதை போல, மகன் வேடத்தில் நடிக்கும் விஜயுக்கு இளமை தோற்றத்துக்காக டி ஏஜிங் ப்ராசஸுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் முதற்கட்ட பட வேலைகளில் படக்குழு கலந்து கொண்டது. 

அதில் விஜயிற்கு விஎஃப்எக்ஸ் பணிக்காக நிறைய டெஸ்ட் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இப்படத்திற்கு பாஸ் அல்லது Puzzle என பெயர் வைக்கப்பட்ட இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அந்த டைட்டில் எல்லாம் இல்லை. வெங்கட் பிரபு மேலும் சுவாரஸ்யமான டைட்டில் உடன் வருவார் எனக் கூறி இருந்தார்.

இதையும் படிங்க: பாதி முடிந்து படம் டிராப்! வேறு படமா வந்து சூப்பர் ஹிட் அடித்த சூப்பர் ஸ்டார் படம்!….

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.